- Advertisement -
ஐ.பி.எல்

தேங்க் யூ சோ மச்.. தன்னை ஏலத்தில் வாங்கிய சி.எஸ்.கே அணிக்கு நன்றி தெரிவித்து – சர்பராஸ் கான் நெகிழ்ச்சி பதிவு

அபுதாபியில் நேற்று டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலத்தில் 10 அணிகளின் நிர்வாகமும் சேர்ந்து மொத்தமாக 77 வீரர்களை விலைக்கு வாங்கியிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்திருந்த வேளையில் அவர்களில் குறிப்பிட்ட அளவிலான வீரர்களே நேற்று ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

எனக்கு புதிய வாழ்க்கையை வழங்கிய சி.எஸ்.கே அணிக்கு நன்றி : சர்பராஸ் கான்

அப்படி இடம்பெற்றிருந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்களில் இருந்து 77 வீரர்கள் தற்போது அனைத்து அணிகளாலும் வாங்கப்பட்டு அடுத்த ஐபிஎல் தொடருக்கான அனைத்து அணிகளும் மொத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு தங்களது அணிகளை உறுதி செய்து விட்டது.

- Advertisement -

இவ்வேளையில் நேற்று நடைபெற்ற மினி ஏலத்தின் போது பல்வேறு வீரர்களின் இடமாற்றம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது. அதோடு புதிய வீரர்களை தங்களது தேவைக்கு ஏற்றார் போல் பல அணிகளும் வாங்கியதும் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

அந்த வகையில் சி.எஸ்.கே அணி இளம் வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு புதிய இளம் வீரர்களை வாங்கியிருந்தது. இந்நிலையில் இந்திய அணியில் தனது இடத்திற்காக போராடி வரும் சர்ஃபராஸ் கானையும் 75 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு சென்னை அணி வாங்கயிருந்தது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்ஃபாஸ்கான் :

- Advertisement -

சென்னை அணியில் இருந்தால் நிச்சயம் நமக்கு பலம் என்று சுரேஷ் ரெய்னா நேற்று காலை தெரிவித்திருந்த வேளையில் அவரை சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத சர்ஃபராஸ் கான் மீண்டும் சென்னை அணிக்கு தேர்வாகியுள்ளது குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 30இல் 78 சிக்ஸ் 2 சதம்.. 14.20 கோடிக்கு சிஎஸ்கே சும்மா வாங்கல.. தோனி பிளானில் கார்த்திக் விவரம் இதோ

அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : “தேங்க் யூ சோ மச்”, “சி.எஸ்.கே அணி எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கியதற்கு நன்றி” என நெகிழ்ச்சியாக தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் சர்பராஸ் கான் நிச்சயம் ஐபிஎல் தொடரிலும் அசத்துவார் என்பது உறுதி.

- Advertisement -