- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னையா குண்டுன்னு கிண்டல் பண்ணீங்க.. இந்தியாவுக்காக சர்பராஸ் கான் செய்த 2 காரியம்.. ரசிகர்கள் பாராட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் சமீப வருடங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவித்து போராடி வந்தார். இருப்பினும் இந்திய தேர்வுக்குழுவினர் அவரைத் தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. அதனால் நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். அப்போது கொஞ்சம் உடல் பருமனாக குண்டாக இருப்பதாலேயே சர்பராஸ் கானுக்கு தேர்வுக்குழுவினர் வாய்ப்பு கொடுக்க யோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன.

அதே போல குண்டாக இருப்பவருக்கு ஃபிட்டான இந்திய அணியில் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் கிண்டல்கள் வந்தன. அதைப் பார்த்து கடுப்பான முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு திறமை தான் முக்கியம் என்று சாடினார். அத்துடன் மெலிதான வீரர்களை உள்ளூர் கிரிக்கெட்டில் தேடாமல் ஃபேஷன் மாடல்களிடம் தேடுமாறு கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

என்னையா கிண்டல் பண்ணீங்க:

அதன் காரணமாக கடந்த 2024 இங்கிலாந்து தொடரில் காயமடைந்த ராகுல், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சர்பராஸ் கான் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்த வாய்ப்பில் அரை சதத்தை அடித்து அசத்திய அவர் கடந்த நியூசிலாந்து தொடரில் பெங்களூரு போட்டியில் சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதன் காரணமாக அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சர்பராஸ் கான் எந்த அணிக்காகவும் விளையாட தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த நேரத்தை வீணடிக்காத அவர் தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்கு கடுமையாக உழைத்து வருகிறார். அதன் பயனாக தற்போது அவர் 10 கிலோ உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறியுள்ளார். அது பற்றிய புகைப்படத்தை சர்பராஸ் கான் சமூக வலைதளங்களில் புகைப்படமாக பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

ரசிகர்கள் பாராட்டு:

இது போக விராட் கோலி போன்ற ஜாம்பவான்களையே எதிரணி பவுலர்கள் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை வீசி காலி செய்தார்கள். எனவே அதை சமாளித்து இங்கிலாந்தில் வெற்றிகரமாக விளையாடுவதற்காக சர்பராஸ் கான் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளுக்கு எதிராக பேட்டிங் பயிற்சிகளை செய்து வருகிறார். இங்கிலாந்து தொடர் துவங்குவதற்கு முன் சர்பராஸ் இன்னும் கொஞ்சம் எடையைக் குறைக்க உள்ளதாக அவருடைய தந்தை நௌசத் கான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாய் சுதர்சனுடன் இந்த அரிதான சாதனையை செஞ்ச.. சுப்மன் கில் லீடருக்கான ஹால்மார்க்.. கவாஸ்கர் பாராட்டு

மொத்தத்தில் ஐபிஎல் நடைபெறும் சமயத்தில் இந்தியாவுக்கு அசத்துவதற்காக சர்பராஸ் கான் இப்போதே தம்முடைய எடையை குறைத்து பயிற்சிகளை எடுப்பதற்காக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். அந்த உழைப்பின் பயனாக இந்தியா ஏ அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்து நடைபெறும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் அவர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -