சாய் சுதர்சனுடன் இந்த அரிதான சாதனையை செஞ்ச.. சுப்மன் கில் லீடருக்கான ஹால்மார்க்.. கவாஸ்கர் பாராட்டு

Sunil Gavaskar 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 60வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேஎல் ராகுல் 112* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் சதத்தை அடித்து 108*, கேப்டன் சுப்மன் கில் 93* ரன்கள் விளாசி 19வது ஓவரிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் விக்கெட்டே இழக்காமல் அதிகபட்ச இலக்கை (200) வெற்றிகரமாக சேசிங் செய்த ஜோடியாகவும் அவர்கள் சாதனை படைத்தனர். இதற்கு முன் 2017ஆம் ஆண்டு குஜராத்துக்கு எதிராக கௌதம் கம்பீர் – கிறிஸ் லின் 184 ரன்களை விக்கெட் இழக்காமல் கொல்கத்தாவுக்கு சேசிங் செய்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

அரிதான சாதனை:

இந்நிலையில் சாய் சுதர்சன் ஆரம்பத்தில் தடுமாறிய போது கேப்டன் சுப்மன் கில் அவருக்கு போதுமான தன்னம்பிக்கையையும் சதமடிக்கும் வாய்ப்பையும் கொடுத்ததாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அதுவே ஒரு உண்மையான கேப்டனுக்கான முத்திரை என்றும் அவர் பாராட்டியுள்ளார். சுதர்சனுடன் சேர்ந்து டி20 கிரிக்கெட்டில் அரிதான டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்த கில் பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.

“ஒரு உண்மையான லீடர் எப்போதும் புகழை விரும்ப மாட்டார். தன்னுடைய அணி வீரர்கள் அங்கீகாரம் பெறுவதிலிருந்து அவர் மகிழ்ச்சியை எடுத்துக் கொள்வார். அதைத்தான் சுப்மன் கில் இந்த சீசன் முழுவதும் அற்புதமாக செய்து வருகிறார். குல்தீப் யாதவ் பவுலிங் செய்த போது எதிர்ப்புறம் இருந்து அவர் சுதர்சனுக்கு தன்னம்பிக்கைக் கொடுத்தார்”

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:

“அவரை எதிர்கொள்ள சாய் சுதர்சன் ஆரம்பத்தில் தடுமாறினார். அப்போது தன்னுடைய கைகளால் சிறிய சைகைகளை செய்த கில் இந்த பவுலரிடம் எச்சரிக்கையாக இருங்கள். அதே சமயம் அதிரடியாக விளையாடுவதை நிறுத்தாதீர்கள் என்று சுதர்சனுடன் சொன்னதை நீங்கள் பார்த்திருக்க முடியும். அது தான் என்னை மிகவும் கவர்ந்தது”

இதையும்படிங்க: கே.எல் ராகுலுக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய – சுப்மன் கில்

“நீங்கள் சிக்ஸர்களை அடியுங்கள் நான் பௌண்டரிகளை அடிக்கிறேன் என்று அவர் சுதர்சனிடம் சொன்னார் என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் இடது வலது கை ஜோடி எப்போதுமே வெற்றிக்கு உதவும். அவர்கள் மிகவும் குறைந்த ரிஸ்க் எடுத்து அதிக வெகுமதி கிடைக்கும் ஷாட்டுகளை அடித்தார்கள். சுதர்சன் அந்த ஷாட்டுகளை செயல்படுத்துவதை கில் எதிர்ப்புறம் மகிழ்ச்சியுடன் பார்த்தார். அதுவே ஒரு உண்மையான கேப்டனுக்கான முத்திரையாகும். டி20 கிரிக்கெட்டில் டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அரிது. அதை அடித்தது அவர்களுடைய ஃபார்மை காட்டுகிறது” என்று கூறினார்.

Advertisement