- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருவேளை சுப்மன் கில் ஆடலனா அவருக்கு பதிலா இவர்தான் பிளேயிங் லெவனில் விளையாடுவார் – விவரம் இதோ

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

சுப்மன் கில்லுக்கு பதிலாக இடம்பிடிக்கப்போகும் வீரர் :

அதன்படி நாளை அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் விளையாட இருக்கும் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் பெங்களூரில் கனத்த மழை பெய்து வருவதா நாளைய ஆட்டம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும் சந்தேகமாகியுள்ளது. ஏனெனில் சுப்மன் கில்லுக்கு கழுத்து பகுதி மற்றும் தோள்பட்டை ஆகியவற்றில் வலியிருப்பதாக அவர் ஏற்கனவே அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக சுப்மன் கில் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. அதனால் சுப்மன் கில்லிற்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பார்க்கையில் சுப்மன் கில் விளையாடும் மூன்றாவது இடத்தில் நிச்சயம் அனுபவ வீரரான கே.எல் ராகுல் விளையாடவே அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் கே.எல் ராகுலின் ஐந்தாவது இடத்தில் விளையாட பிளேயிங் லெவனில் ஒரு வீரரை சேர்க்கப்பட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் இருக்கட்டும்.. அவரை சைலன்ட் பண்ணா 2023 உ.கோ மாதிரி இந்தியாவை வீழ்த்துவோம்.. கமின்ஸ் உறுதி

அந்த வகையில் பார்க்கையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்த சர்பராஸ் கான் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளில் இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவருக்கு நிச்சயம் இந்திய அணி முன்னுரிமை அளிக்கும் என்பதால் அவரே பிளேயிங் லெவனில் இணைவார் என்றும் தெரிகிறது.

- Advertisement -