ரிஷப் பண்ட் இருக்கட்டும்.. அவரை சைலன்ட் பண்ணா 2023 உ.கோ மாதிரி இந்தியாவை வீழ்த்துவோம்.. கமின்ஸ் உறுதி

Pat Cummins 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் அடுத்தடுத்து முதல் முறையாக வென்று இந்தியா வரலாறு படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற இந்தியா போராட உள்ளது.

மறுபுறம் ரிஷப் பண்ட் போன்ற வீரர்களை அமைதியாக வைத்திருந்து இம்முறை இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் அந்தத் தொடரில் இந்திய பவுலிங் துறையின் முதுகெலும்பான ஜஸ்ப்ரித் பும்ராவை அமைதியாக வைத்திருப்பது அவசியம் என்று பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பும்ராவின் ரசிகன்:

அதை செய்தால் இந்தியாவை இம்முறை தங்களால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல் போல கண்டிப்பாக வீழ்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஆஷஸ் தொடரை போல இந்தியாவும் தங்களுக்கு சவாலை கொடுப்பதாக தெரிவிக்கும் கமின்ஸ் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நான் பும்ராவின் பெரிய ரசிகன். அவர் அற்புதமான பவுலர் என்று நினைக்கிறேன்”

“நாங்கள் வெற்றி பெற வேண்டிய இந்தத் தொடரில் அவரை அமைதியாக வைத்திருப்போம் என்று நம்புகிறேன். அவருடன் வரக்கூடிய இன்னும் சில பவுலர்கள் ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் விளையாடியதுல்லை. எனவே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை பார்க்க வேண்டும். கடந்த 2 தொடர்கள் நடந்து நீண்ட காலமாகி விட்டது. அதிலிருந்து நாங்கள் கடந்து வந்து விட்டோம். ரோஹித் சர்மாவுடன் நான் விளையாடியதில்லை”

- Advertisement -

2023 வெற்றிகள் போல:

“எனவே அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும் இந்த இந்திய அணி நன்றாக திட்டமிட்டு வருவது போல் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் கடந்த வருடங்களில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் இந்தியாவுக்கு எதிராக வெற்றியை பெற்றோம். அந்த நினைவுகளை நாங்கள் எடுத்துக் கொள்ள முயற்சிப்போம்”

இதையும் படிங்க: நானே ஃபீல் பண்றேன்.. இம்முறை கிரேட்டான அவர் விளையாடாதாது இந்தியாவுக்கு அவமானம்.. கமின்ஸ் பேட்டி

“இந்தியாவும் கடந்த தொடர்களில் இங்கே பதிவு செய்த வெற்றி நினைவுகளுடன் வருவார்கள். கடந்த 2 தொடர்களில் எங்களுடைய சொந்த ஊரில் இந்தியா வென்றனர். கடந்த தசாப்தத்தில் நாங்கள் இங்கிலாந்துக்கு எதிராக நிறைய வெற்றிகளை பெற்றோம். அதற்கு சமமாக இந்த தொடரும் இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது அந்நாட்டு ரசிகர்கள் பெருமளவு பார்ப்பார்கள். எனவே ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போல கண்ணாடியில் அதுவும் கிட்டத்தட்ட நெருக்கமான போட்டியாகும்” என்று கூறினார்.

Advertisement