நானே ஃபீல் பண்றேன்.. இம்முறை கிரேட்டான அவர் விளையாடாதாது இந்தியாவுக்கு அவமானம்.. கமின்ஸ் பேட்டி

Pat Cummins
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த ஊரில் விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடர்களையும் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றியைப் பெற இந்தியா தயாராகி வருகிறது.

மறுபுறம் கடந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல் போல இந்தியாவை தோற்கடிக்க ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. முன்னதாக 2018 – 19 ஆஸ்திரேலிய தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த புஜாரா தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு உதவினார்.

- Advertisement -

இந்தியாவுக்கு அவமானம்:

அதே போல 2020 – 21 தொடரில் அதிக பந்துகளை பாறையைப் போல் எதிர்கொண்டு உடம்பில் அடிவாங்கிய அவர் இந்தியாவின் வெற்றியில் கருப்புக் குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் இம்முறை புஜாராவை போன்ற உண்மையான டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியாவுக்கு விளையாட மாட்டார் என்பது இந்தியாவின் அவமானம் என்று கேப்டன் பட் கமின்ஸ் கூறியுள்ளார். இம்முறை அவருக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்பது தமக்கும் ஒரு விதமான உணர்வை கொடுப்பதாகவும் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “புஜாராவுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பாக இருக்கும். அவர் உங்களிடமிருந்து சவாலில் எப்போதும் விலகிச் செல்லாதவர்களில் ஒருவர். ஏனெனில் அவர் பேட்டிங், பேட்டிங், பேட்டிங் செய்துக் கொண்டே இருப்பார். அவருக்கு எதிரான போட்டியை நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன்”

- Advertisement -

கிரேட் பேட்ஸ்மேன் புஜாரா:

“அதில் சில நாட்களில் அவர் வென்றார். சில நாட்களில் நானும் வென்றேன். இம்முறை அவர் இல்லாமல் விளையாடப் போவது வித்தியாசமான உணர்வை கொடுக்கிறது. புஜாரா கிரேட் பிளேயர். கடந்த காலங்களில் அவருக்கு எதிராக நான் நிறைய போட்டிகளைக் கொண்டிருந்தேன். அது தான் உண்மையான டெஸ்ட் போட்டியாகும். அது ஒருவரையொருவர் மிஞ்ச விரும்புவதைப் போன்ற போட்டியாக இருக்கும்”

இதையும் படிங்க: சாரி அவரைத் தவிர பாபர் அசாம் போன்ற யாரும் கிங் கோலியுடன் ஒப்பிட தகுதியில்லாதவங்க.. அஸ்வின் பதிலடி

“அந்த டெஸ்ட் கிரிக்கெட்டை நான் விரும்புவேன். அப்படிப்பட்ட அவர் இம்முறை இங்கே இருக்க மாட்டார் என்பது அவமானம். இருப்பினும் அவரைப் போன்ற ஸ்டைலை ஒருவரை இந்தியா அழைத்து வருவார்கள் என்று நான் நினைக்கிறேன். சொந்த மண்ணுக்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்வது மிகவும் கடினம். இந்தியா அதை உலகம் முழுவதிலும் செய்து வருகின்றனர். சொந்த மண்ணைப் போலவே வெளிநாடுகளிலும் அவர்கள் சிறந்த அணி. அதுவே அவர்களுடைய பெயர்” கூறினார்.

Advertisement