சரியான ரூட்டுல போய்ட்டு இருக்கோம்.. இந்திய தேர்வுக் குழுவை பாராட்டிய முன்னாள் செலக்டர் சரந்தீப் சிங்

Sarandeep Singh
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயத்தை சந்தித்ததால் கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல விராட் கோலி நீண்ட நாட்கள் கழித்து அத்தொடரில் தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் விளையாடியிருந்த அந்த சீனியர் ஜோடி மேற்கொண்டு கடந்த ஒன்றரை வருடங்களாக எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடாமல் இருந்து வந்தது. அந்த சூழ்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக இருந்த சீனியர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இம்முறை புதிய அணியை பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் களமிறக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

- Advertisement -

சரியான ரூட்:
இருப்பினும் தற்போது ஆப்கானிஸ்தான் தொடரில் இடம் பிடித்துள்ளதால் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் ரோகித் மற்றும் விராட் ஆகிய சீனியர்களை மீண்டும் கொண்டு வந்துள்ள அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவின் முடிவு சரியானது என முன்னாள் உறுப்பினர் மற்றும் வீரர் சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணத்தை விளக்கி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது சரியான முடிவாகும். ஐசிசி தொடர்களில் வெற்றி பெற அழுத்தத்தை கையாண்டு அசத்தக்கூடிய வீரர்கள் உங்களுக்கு தேவை. அந்த வகையில் நிறைவு பெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அந்த இருவருமே அபாரமாக விளையாடி டாப் ஃபார்மில் இருக்கிறார்கள். அதே சமயம் அவர்கள் தேர்வானதால் ஜெய்ஸ்வால், ருதுராஜ் இடம் பிடிப்பது கடினமாகியுள்ளது”

- Advertisement -

“உங்களுக்கு பெஞ்சில் உள்ள வீரர்களும் வலுவானவர்களாக இருப்பது அவசியம். இந்த டி20 உலகக் கோப்பை விராட் மற்றும் ரோஹித்துக்கு கடைசியாக இருக்கலாம். ஒருவேளை ரோகித் மற்றும் விராட் ஆகியோர் கடந்த வருடங்களில் ஓய்வு எடுக்காமல் இருந்திருந்தால் நீங்கள் ஜெய்ஸ்வால், ருதுராஜ், ஜிதேஷ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சோதித்திருக்க முடியாது”

இதையும் படிங்க: அவரோட விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டம் பண்ணிருக்கணும்.. பஃப் டு பிளேஸிஸ் வெளிப்படை

“எனவே ரோஹித், விராட் போன்ற ஜாம்பவான் வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதற்கு எந்த தேவையும் இல்லை. ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வைத்து டி20 உலகக் கோப்பையில் விளையாடப் போகும் அனைத்து வீரர்களின் ஃபார்ம் பற்றிய தெளிவான முடிவு உங்களுக்கு பின்னர் கிடைக்கும்” என்று கூறினார்.

Advertisement