ஹார்டிக் பாண்டியா வேணாம். இவங்க 3 பேர்ல ஒருத்தர ட்ரை பண்ணலாம் – சரண்தீப் சிங் ஆலோசனை

Sarandeep-singh
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : இதுபோன்ற மைதானங்களில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என வெளிப்படையாக கூறியிருந்தார்.

IND

- Advertisement -

இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாகவே இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனை அறிவித்தது அதில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருந்ததால் அணியை மாற்ற வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் இறுதி நேரத்திலும் அணியை மாற்றாமல் அப்படியே விளையாட வைத்து இறுதிப் போட்டியில் விராத் கோலி தோல்வியடைந்ததன் காரணமாக அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் குறையாக இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டருக்கான இடத்தில் ஹார்திக் பாண்டியா தேவையில்லை என்றும் அவருக்கு பதில் 3 வீரர்கள் இருக்கின்றனர் எனவும் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பாண்டியாவின் காயம் குணமடைந்து அவர் எப்போது திரும்புவார் என்பது குறித்து யாருக்கும் தெரியாது.

pandya

எனவே அவருக்காக இந்திய அணி காத்திருக்கக் கூடாது. அவருக்கு பதிலாக 3 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் உள்ளனர். அதன்படி ஷர்துல் தாகூர், விஜய் சங்கர், சிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பளித்து அவர்களை வளர்த்து விட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : இறுதிப் போட்டிக்கு முன்பாக மழை பெய்தது அந்த மழை பெய்த பிறகும்கூட அணியில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை சேர்க்காமல் இரண்டு ஸ்பின்னர்களுடன் இறங்கியது ஏன் என சரண்டீப் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Thakur

மேலும் இதுபோன்ற இங்கிலாந்து ஆடுகளங்களில் ஷர்துல் தாகூர் நல்ல முறையில் பந்தை ஸ்விங் செய்து பௌலிங் வீசுவார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடியவர் அவரை 15 பேர் கொண்ட அணியில் சேர்க்காதது தவறு என கடுமையாக சாடியுள்ளார்.

Advertisement