இந்திய அணியில் 4 ஆவது வேகப்பந்து வீச்சாளராக இவரே விளையாட வேண்டும் – சரண்தீப் சிங் பேட்டி

Sarandeep-singh
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும் வேகப் பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணியானது நான்காவது வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியானது நான்காவது வேகப்பந்து வீச்சாளரை களமிறக்க நினைத்தால், அந்த இடத்தை ஷர்துல் தாக்கூருக்குத் தான் வழங்க வேண்டும் என்று கருத்து கூறியிருக்கிறார் இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் உறுப்பினாரான சரன்தீப் சர்மா.

INDvsNZ

- Advertisement -

மேலும் ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்த்தால் இந்திய அணியானது முக்கியமான ஒரு வீரரை வெளியில் அமர வைத்தாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர்,
இங்கிலாந்தின் சூழ்நிலை வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், ஜாஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா மற்றும் முஹம்மது ஷமி ஆகியோருடன் சேர்த்து ஷர்துல் தாக்கூரையும் இந்திய அணியானது விளையாட வைக்க வேண்டும். முஹம்மது சிராஜைவிட தாக்கூர் சிறப்பாக செயல்படுவார் என்பதால் நான்காவது பௌலராக அவரையே தேரந்தெடுக்க வேண்டும்.

இந்திய அணியானது பேட்டிங் ஆர்டரை மேலும் வலுப்படுத்த நினைத்தால் அதற்கு தாக்கூர் தான் சிறந்த தேர்வாக இருப்பார். மேலும் அவரிடம் பந்தை ஸ்விங் செய்யும் திறமை அதிகமாகவே இருப்பதால், இங்கிலாந்தில் அவருடைய செயல்படு சிறப்பானதாக இருக்குமென்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின்போது சிறப்பாக பந்து வீசி அசத்திய ஷர்துல் தாக்கூர் அற்புதமான பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மேலும் பேசிய சரண்தீப்,

Thakur

நான்காவது பவுலரை இந்திய அணி தேர்வு செய்தால், துருதிர்ஷ்ட வசமாக ரவீந்திர ஜடேஜா வெளியில் அமர வைக்கப்படுவார். நியூசிலாந்து அணியில் சில இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஷ்வினை விளையாட வைப்பதே சிறந்ததாக இருக்குமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

Thakur 1

நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்து அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு எந்த பயிற்சி போட்டியும் இல்லதததால் தற்போது இந்திய வீரர்கள் இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement