இந்திய வீரர்களான அவங்க 2 பேரை அவுட் ஆக்கனுனா மணிக்கணக்கா காத்திருக்கனும் – சக்லைன் முஷ்டாக் பேட்டி

Saqlain-Mushtaq
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அந்தப் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இவ்விரு அணிகளும் மோதும் போது உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இந்த போட்டியின் மீது இருக்கும் என்பதனாலும், கூடுதலாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாட்டு ரசிகர்களும் உன்னிப்பாக இந்தப் போட்டியின் முடிவு குறித்து எதிர்பார்ப்பதினாலும் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி எந்த காலத்தில் நடைபெற்றாலும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும்.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

அந்த வகையில் இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பல போட்டிகள் மிகவும் சுவாரசியமாக நடைபெற்று முடிந்த வேளையில் இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களுமே தற்போது ஜாம்பவானாகவும் மாறி உள்ளனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான சாக்லைன் முஷ்டாக் இதுவரை தான் விளையாடியதில் இந்திய வீரர்களுக்கு எதிராக பந்து வீசியது குறித்த அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில் சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு எதிராக பந்து வீசிய விதம் குறித்தும் அவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

dravid

நான் சச்சின் மற்றும் டிராவிடை பல சந்தர்ப்பங்களில் ஆட்டமிழக்க வைத்துள்ளேன். ஆனாலும் அவர்கள் இருவரது விக்கெட்டுகளையும் எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் அவர்கள் இருவரின் விக்கெட்டையும் எடுக்க நினைத்தால் பல மணி நேரம் களத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும். எலியை பிடிப்பதற்கும், புலியை பிடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா.

- Advertisement -

அப்படித்தான் அவர்கள் இருவரும் பேட்டிங் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். மற்ற வீரர்களை நாம் எளிதாக வீழ்த்தி விடலாம். ஆனால் அந்த இரண்டு வீரர்களை வீழ்த்த நரியை போல தந்திரம் செய்து, பொறிவைத்து சரியான நேரத்தில் வெளியேற்ற வேண்டும். இதனால் அவர்களது விக்கெட்டை வீழ்த்த மணிக்கணக்காக நான் காத்திருந்திருக்கிறேன். சில நேரங்களில் 20 ஓவர்களுக்கும் அதிகமாகவும் பந்து வீசி இருக்கிறேன்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : ஜடேஜாவை விட அவர் தான் இந்த சீசனில் சென்னையின் துருப்பு சீட்டா இருப்பாரு – மேத்தியூ ஹெய்டன் கணிப்பு

அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் தரமான வீரர்கள் அவர்கள் இருவரையும் வெளியேற்றுவது என்பது சாதாரண விடயம் அல்ல என சக்லைன் முஷ்டாக் சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் குறித்து புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement