சச்சின் என்கிட்ட கூறிய இந்த வார்த்தை தான் என்னை முழுமையான மனிதனாக்கியது – பாக் வீரர் ஓபன் டாக்

Mushtaq
- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு ஐசிசி, பிசிசிஐ, விராட் கோலி, யுவ்ராஜ் சிங் மற்றும் அஸ்வின் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் சச்சின் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் பாதிப்பில் இருப்பதனால் தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

இருப்பினும் சமூகவலைதளத்தில் சச்சினுக்கு தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. அதே போன்று பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களும் சச்சினுடன் தாங்கள் இருந்த அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சச்சின் குறித்த ஒரு முக்கியமான சுவாரசியமான விஷயத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சக்லைன் முஸ்டாக் பகிர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சக்லைன் முஸ்டாக் பாகிஸ்தான் அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். சச்சின் விளையாடிய காலத்திலேயே அவரும் விளையாடியதால் அவர் குறித்த ஒரு சுவாரசியமான நிகழ்வினை பகிர்ந்துள்ளார். அதன்படி 1997 ஆம் ஆண்டு சகாரா கோப்பையில் சச்சின் டெண்டுல்கரிடம் ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.அதன்படி அவர் கூறுகையில் :

Mushtaq 1

முதல் முறை நான் சச்சினை பார்த்து ஸ்லெட்ஜிங் செய்தேன். அதுவே நான் என் வாழ்நாளில் செய்த முதலும், கடைசியான ஸ்லெட்ஜிங்காக அமைந்ததை அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சஹாரா கோப்பை போட்டியின்போது முதலில் நான் அவரை ஸ்லெட்ஜிங் செய்தேன். ஆனால் என்ன கூறினேன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் சச்சின் என்னிடம் கூறியது என் மனதை பிசைந்தது.

- Advertisement -

அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் மனதில் இருக்கின்றன. நான் அவரை நோக்கி ஸ்லெட்ஜிங் செய்தவுடன் அவர் என்னிடம் வந்து “நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டேனா ? நீ ஏன் என்னிடம் தவறாக நடந்து கொள்கிறாய்” என்று கேட்டார். எனக்கு அவர் கேட்ட அந்த வார்த்தைகள் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியது. நான் என்ன கூறுவது என்று தெரியாமல் அவர் முன் முழித்துக்கொண்டு நின்றேன்.

Mushtaq 2

சச்சின் மீண்டும் என்னிடம் வந்து நான் உங்களை ஒரு வீரர் ஆகவும், மனிதராகவும் உங்களை உயர்நிலையில் வைத்திருக்கிறேன் என்றார் எனக்கு இன்னும் என்னவோ மாதிரி ஆகிவிட்டது. ஆட்டம் முடிந்தவுடன் நான் சச்சினிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் அதுபோன்ற செயலை நான் செய்ய அறவே மறந்து விட்டேன் என்றும் சக்லைன் முஸ்டாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement