ஸ்லெட்ஜிங் செய்த என்னை சச்சின் அன்பால் சாய்த்ததை நெனச்சா கடுப்பாகுது – 1997 பின்னணியை பகிரும் சக்லைன் முஷ்டக்

Saqlain Mushtaq
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது பிஞ்சு கால்களுடன் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானது முதல் ஓய்வு பெறும் 2013 வரை 24 வருடங்களாக மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 30000+ ரன்களையும் 100 சதங்களையும் விளாசி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அவரது காலத்தில் இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமெனில் முதலில் சச்சினை வீழ்த்த வேண்டும் என்று எதிரணியினர் கங்கணம் கட்டிக்கொண்டு வருவார்கள். குறிப்பாக ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், ஆலன் டொனால்ட், கிளன் மெக்ராத் போன்ற வரலாற்றின் மகத்தான பவுலர்கள் அவருக்கு சவால் கொடுத்ததும் அதை சச்சின் பலமுறை வெற்றிகரமாக சமாளித்ததும் மறக்க முடியாதது.

sachin 2

- Advertisement -

அதிலும் குறிப்பாக அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்றுமே வேலைக்கு ஆகவில்லை என்றாலும் பவுன்சர் பந்தை வீசி சச்சினை காயமடைய வைத்து பெவிலியனுக்கு அனுப்பி வெற்றி காண வேண்டுமென நினைப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் பாகிஸ்தானை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டக் பலமுறை தனது மாயாஜால சுழலால் சச்சினை அவுட்டாக்கியுள்ளார். குறிப்பாக 1999ஆம் ஆண்டு சென்னை டெஸ்டில் சதமடித்து வெற்றிக்கு போராடிய சச்சினை தூஸ்ரா பந்தால் அவுட்டாக்கி இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த அவர் 2015ஆம் ஆண்டு ஒரு கண்காட்சி போட்டியில் க்ளீன் போல்ட்டாக்கினார்.

அன்பால் பதிலடி:
இருப்பினும் 1997ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் மோசமான வார்த்தைகளால் ஸ்லெட்ஜிங் செய்த போது சச்சின் அன்பான வார்த்தைகளால் தம்மை அமைதிப் படுத்தியதாக தெரிவிக்கும் சக்லைன் முஷ்டக் நேரம் செல்ல செல்ல தனது பந்துகளை அடித்து நொறுக்கிய போது தான் அறிவால் தன்னை வீழ்த்தியதை உணர்ந்து கடுப்பானதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருமுறை சச்சினுடன் எனக்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி விட்டு நான் கனடாவுக்கு சென்றேன். அப்போது மிகவும் இளம் பையனாக இருந்த நான் என்னுடைய சொந்த பந்து வீச்சை பின்பற்றி வந்தேன்”

saqlain

“இருப்பினும் கவுண்டி தொடரில் விளையாடிய பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறினேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மிகவும் அறிவான கிரிக்கெட் வீரர். அந்த போட்டியில் முதல் ஓவரை வீசிய நான் அவரை ஸ்லெட்ஜிங் செய்தேன். குறிப்பாக சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய போது என்னிடம் வந்த சச்சின் “சாஹி நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தும் ஒருவராக நீங்கள் தோன்றவில்லை. நீங்கள் நல்ல மனிதர் என்று நினைத்தேன்” எனக் கூறினார். அதை மிகவும் அன்பாக அவர் கூறியது அடுத்த 4 ஓவர்கள் வரை எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது”

- Advertisement -

“குறிப்பாக அவர் என்னைப் பற்றி என்ன சொன்னார் என்பதை உணர்வதற்குள் அவர் தனது வேலையை முடித்துக் கொண்டார். அதாவது அவர் தன்னுடைய பேட்டிங்கில் செட்டிலாகி விட்டார். கிரிக்கெட்டில் இதெல்லாம் ஒரு வகையான யுக்திகளாகும். அதாவது ஒருவர் உங்களைப் பற்றி நல்லபடியாக பேசும் போது நீங்கள் அதைப் பற்றி நினைப்பீர்கள். அந்த வகையில் நான் அதைப் பற்றி நினைக்கும் போது சச்சின் என்னுடைய அடுத்த 4 – 5 ஓவர்களில் குறைந்தது ஒரு பவுண்டரி அடித்தும் அவரை நான் மதித்தேன். ஆனால் கடைசியாக இறங்கி வந்து ஒரு பவுண்டரி அடித்த போது தான் அவர் என்னுடைய முகத்தில் அடித்ததாக உணர்ந்தேன்”

இதையும் படிங்க:IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி – பாதிக்கப்பட வாய்ப்பு

“அப்போது தான் அவர் என்னிடம் மனதளவில் விளையாடியதை உணர்ந்தேன். அதை பயன்படுத்தி அவர் செட்டிலாகி விட்டதால் அப்போட்டியில் என்னால் எதுவும் செய்ய முடியாமல் போனது. அந்தப் போட்டிக்கு பின் ஒருநாள் மாலையில் ஹோட்டலில் அவரை சந்தித்த நான் “நீங்கள் மிகவும் சாதுரியமான மனிதர்” என்று அவரிடம் கூறினேன். அப்போது அவர் புன்னகைத்தார். அந்த தருணத்தில் தான் அவர் தன்னுடைய பேட்டில் அல்லாமல் அன்பான வார்த்தைகளால் எப்படி என்னை வலையில் சிக்க வைத்தார் என்பதை புரிந்து கொண்டேன்” என்று கூறினார்.

Advertisement