தல தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் இருக்கும் சஞ்சு சாம்சன் – ஆசிய கோப்பையில் நிகழுமா?

Samson and Dhoni
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் பி.சி.சி.ஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு அவர்கள் இருவர் உட்பட மொத்தம் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியே அடுத்த 2026 டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்கும் என்பதனால் இந்த தொடரில் இந்திய அணியின் வீரர்கள் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

எம்.எஸ் தோனியை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் சஞ்சு சாம்சன் :

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளதால் துவக்க வீரரான சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழப்பார் என்று கடந்த சில நாட்களாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் தான் எந்த இடத்திலும் விளையாட தயார் என்று அறிவித்துள்ள சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரிலும் விளையாடும் வகையில் சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் எந்த இடத்தில் விளையாடுவார்? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிற்கு முன்னேறும் பட்சத்தில் மொத்தம் ஏழு போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. அப்படி இந்த ஏழு போட்டியிலும் சஞ்சு சாம்சன் இடம்பிடித்து விளையாடினால் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் டி20 சாதனை ஒன்றினை முறியடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் சஞ்சு சாம்சன் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 42 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 49 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதில் 36 சிக்ஸர்களை அவர் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளை பொருத்தவரை இந்திய அணி சார்பாக அதிக சிக்ஸர்களை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அடித்த வீரர் என்ற சாதனையை முன்னாள் கேப்டனான தோனி தன்வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 98 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 52 சிக்ஸர்களை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சஞ்சு சாம்சன் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரின் 7 போட்டிகளில் 17 சிக்ஸர்களை விளாசினால் தோனியை பின்னுக்கு தள்ளி அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : அவரை மாதிரி தன்மையான மனிதரை பாக்க முடியாது.. தல தோனியுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து பேசிய – டேவால்டு பிரேவிஸ்

ஏற்கனவே கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் அவர் சிக்ஸர்களை எளிதாக அடித்து நொறுக்கி வருவதால் இந்த ஆசிய கோப்பை தொடரிலும் பல்வேறு சிக்ஸர்களை விளாசுவார் என்று உறுதியாக நம்பலாம். இதன்மூலம் தோனியை அவர் பின்னுக்கு தள்ளவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement