அவரை மாதிரி தன்மையான மனிதரை பாக்க முடியாது.. தல தோனியுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து பேசிய – டேவால்டு பிரேவிஸ்

Dewald Brevis and Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்து வெறும் 8 புள்ளிகளை மட்டுமே பெற்று பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது. ஐபிஎல் வரலாற்றில் ஜாம்பவான் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் சி.எஸ்.கே அணி அடைந்த இந்த மோசமான தோல்வி ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

தோனியின் அறை கதவுகள் திறந்தே இருக்கும் : டேவால்டு பிரேவிஸ்

இந்த 2025 ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கே கடைசி கட்ட போட்டிகளின் போது இளம் வீரர்களின் வருகையால் சில வெற்றிகளை பெற்று நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணி மீண்டும் பலமான அணியாக கம்பேக் கொடுக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

- Advertisement -

இந்த 2025 ஐபிஎல் தொடரில் பல்வேறு இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தால் அதிகளவு கவனத்தை ஈர்த்திருந்த வேளையில் சென்னை அணிக்கு மாற்று வீரராக உள்ளே நுழைந்த தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டேவால்டு பிரேவிஸ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.

இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடிய அவர் 180 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 37.50 ரன்கள் சராசரியுடனும் 225 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். எனவே எதிர்கால சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராகவும் இவர் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியுடன் இணைந்து விளையாடியது குறித்தும் தோனியுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்தும் பிரேவிஸ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : தோனியை பற்றி நான் சொல்ல வேண்டுமெனில் அவருடைய தன்மையான குணம் அவரை இந்த உயரத்தில் வைத்துள்ளது. எந்த ஒரு வீரருமே, எந்த ஒரு நபருமே அவரை எளிதாக அணுக முடியும். அவருடைய அறையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவருடன் நான் நிறைய நேரத்தை இந்த ஆண்டு செலவிட்டுள்ளேன். குறிப்பாக அவருடன் அமர்ந்து கிரிக்கெட் குறித்த பல்வேறு விடயங்களை அறிந்து கொண்டேன்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்பு சீட்டு அந்த தமிழக வீரர் தான் – இர்பான் பதான் பாராட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்களின் அன்பால் மைதானம் நிரம்பி இருந்தது. நான் மீண்டும் சென்னைக்கு விளையாட வரும்போதும் அதே அன்பு எனக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதனால் சென்னை எனக்கு ஒரு ஸ்பெஷலான இடமாக மாறியுள்ளது என்றும் டேவால்டு பிரேவிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement