அணியில் தேர்வாகி, அனைத்து திறமையும் இருந்தும் 7 போட்டிகளாக வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர் – விவரம் இதோ

Samson-1
- Advertisement -

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக முதல் நாள் போட்டி ஒருவர்கூட வீச படாமல் முடிவுக்கு வந்தது.

ind vs sl

- Advertisement -

இந்த போட்டியில் நடக்காமல் போனதில் ரசிகர்களுக்கு வருத்தம் இருந்தும் ரசிகர்கள் மைதானத்தில் தங்களது ஆதரவை போனில் உள்ள விளக்கு வெளிச்சம் மூலமும் மற்றும் வந்தே மாதரம் பாடல் மூலம் வெளிப்படுத்தி தங்கள் ஆதரவை கொடுத்தனர் மேலும் தற்போது இந்த போட்டி குறித்து சில சர்ச்சையான விடங்களை ரசிகர்கள் பகிர்ந்து வந்தாலும் ரசிகர்களின் முக்கியமான கோரிக்கை ஒன்றும் இணையத்தில் வலுப்பெற்று வருகிறது.

அது யாதெனில் இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் கடந்த இரண்டு தொடர்களாக அதாவது வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அணியில் தேர்வு ஆகிய இருந்தும் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஏழு போட்டிகளாக அவர் வாய்ப்பின்றி தவிர்த்து வருகிறார். பண்ட் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய போதும் சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு கூட இதுவரை வழங்கவில்லை.

samson

இரண்டு தொடர்களாக அணியில் இருந்த அவர் தற்போது இலங்கை தொடரில் இருந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அவரின் திறமை வெளிப்படும் என்பதால் ரசிகர்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இணையத்தில் தொடர்ந்து தங்களது வேண்டுகோளை வைத்து வருகின்றனர். இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் பண்டின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. மேலும் அடுத்த இந்திய அணியின் விக்கெட் கீப்பரை உருவாக்குவதற்காக அவரை ஏற்கனவே தேர்வு செய்ததால் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

samson 2

கடந்த பல தொடர்களாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் பண்டின் மீது வைத்துள்ள நம்பிக்கை அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்து வருகிறது. அவரின் சொதப்பலான ஆட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ரசிகர்கள் அவருக்கு பதிலாக இவருக்கு ஒரு வாய்ப்பாவது அளியுங்கள் என்று சான்சனுக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement