- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சதமடித்தும் சாம்பியன்ஸ் ட்ராபியில் கழற்றி விடப்படும் சஞ்சு சாம்சன்.. 3 கீப்பர்கள் பற்றி வெளியான தகவல்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரியில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஏனெனில் ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே தொடர்ச்சியாக அசத்தியதில்லை. மறுபுறம் சஞ்சு சாம்சன் சமீபத்திய வங்கதேச மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் சதங்களை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் விக்கெட் கீப்பராக விளையாடினால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாகும்.

- Advertisement -

புறக்கணித்த சாம்சன்:

இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபியில் சாம்சன் விக்கெட் கீப்பராக விளையாட தேர்வு செய்யப்பட மாட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் கடைசியாக 2023 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதன் பின் நடைபெற்ற இலங்கை ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக கேரள அணிக்காக விளையாடாமல் புறக்கணித்தார். அதனால் அவரை சாம்பியன்ஸ் டிராபியில் புறக்கணிக்க உள்ள பிசிசிஐ கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடிய ராகுல் நானூருக்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்ல உதவினார்.

- Advertisement -

3 கீப்பர்கள்:

அதே சமயம் ரிஷப் பண்ட், இஷான் கிசான், துருவ் ஜுரேல் ஆகியோரை பேக்-அப் விக்கெட் கீப்பர்களாக தேர்ந்தெடுக்க பிசிசிஐ விரும்புகிறது. அதில் இசான் கிசான் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்திருந்தாலும் கடந்த வருடம் பிசிசிஐ பேச்சைக் கேட்டு ரஞ்சிக் கோப்பை விளையாடவில்லை. அதனால் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட அவரை சாம்பியன்ஸ் டிராபியில் பிசிசிஐ தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

இதையும் படிங்க: துபே, ருதுராஜ் என்ன தப்பு செஞ்சாங்க.. அதுக்கு அப்போவே செலக்ட் பண்ணாம இருக்கலாமே? ஆகாஷ் சோப்ரா

அதனால் ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல் பேக்-அப் விக்கெட் கீப்பர்களாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அதே சமயம் சஞ்சு சாம்சன் விரைவில் துவங்கும் இங்கிலாந்து டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்திய போட்டிகளில் அடுத்தடுத்த சதங்கள் அடித்ததால் அத்தொடரில் அவர் முழுமையாக துவக்க வீரராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -