தோனி, ரிஷப் பண்ட் கூட செய்யாத சாதனையை நிகழ்த்தி அசத்திய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

Sanju Samson
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் சுப்மன் கில்லின் வருகையால் தனது துவக்க வீரருக்கான இடத்தினை இழந்தார். அதனைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஐந்தாவது வீரராக இடம்பிடித்த அவர் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பின்றி வெளியில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. சஞ்சு சாம்சனின் இந்த பேட்டிங் வரிசை மாற்றம் அவருக்கு மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது.

சஞ்சு சாம்சன் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

ஆசிய கோப்பை தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணியானது நேற்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஓமன் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் பேட்ஸ்மன்களுக்கு சரியான பயிற்சி வேண்டும் என்பதற்காக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மூன்றாம் இடத்தில் களமிறங்க வாய்ப்பு கிடைத்த சஞ்சு சாம்சன் அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்தி 45 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 56 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் அவர் அடித்த அரைசதத்தின் மூலம் டி20 வடிவ ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதல் இந்திய வீரராக ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை இரு முறை ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவ போட்டிகளாக நடைபெற்ற போது எந்த ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் அரைசதம் அடித்ததில்லை. ஆனால் ஓமன் அணிக்கு எதிரான இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதையும் படிங்க : உண்மையில் ஓமன் நல்லா பவுலிங் போட்டாங்க.. இந்தியாவை ஜெய்க்க வைத்த இதான் காரணம்.. சாம்சன் பேட்டி

இதன்மூலம் டி20 வடிவ ஆசிய கோப்பை தொடரில் அரைசதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். சமீபகாலமாகவே அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் அவரை தொடர்ச்சியாக இந்திய அணி டாப் ஆர்டரில் பயன்படுத்த வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement