உண்மையில் ஓமன் நல்லா பவுலிங் போட்டாங்க.. இந்தியாவை ஜெய்க்க வைத்த இதான் காரணம்.. சாம்சன் பேட்டி

Sanju Samson
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியில் கடைசி லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஓமன் அணியை இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 188/8 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா அதிரடியாக 38 ரன்கள் எடுத்தார்.

ஆனால் சுப்மன் கில் 5 (8), ஹர்டிக் பாண்டியா 1, சிவம் துபே 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 3வது இடத்தில் வாய்ப்பைப் பெற்ற சஞ்சு சாம்சன் நிதானமாக பேட்டிங் செய்தார். எதிர்ப்புறம் வந்த அக்சர் படேல், திலக் வர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 26 (13), 29 (18) ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

- Advertisement -

போராடிய ஓமன்:

மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய சாம்சன ஆசியக் கோப்பை டி20 தொடரில் அரை சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையுடன் 56 (45) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ஹர்ஷித் ராணா 13* (8) ரன்கள் அசத்தினார். ஓமனுக்கு அதிகபட்சமாக ஜிதன் ரமனண்டி, ஷா பைசல், அமைர் கலீம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ஓமன் அணி முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 167/4 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜதீர்தர் சிங் 32, அமைர் கலீம் 64, ஹமத் மிஸ்ரா 51 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 56 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சாம்சன ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

பாராட்டிய சாம்சன்:

இந்நிலையில் உண்மையிலேயே சிறப்பாக பவுலிங் செய்த ஓமனுக்கு எதிராக நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாட முயற்சித்ததாக சாம்சன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. அதை சமாளிக்க கடந்த சில வாரங்களாக என்னுடைய ஃபிட்னஸில் வேலை செய்தேன். அதற்கு உதவி புரிய எங்களிடம் நல்ல பயிற்சியாளர் ஆண்ட்ரியன் இருக்கிறார்”

இதையும் படிங்க: இந்தியாவை ஜெட்டில்மேன் இல்லன்னு சொன்ன பாக்.. ஓமன் அணிக்கு சூரியகுமார் கொடுத்த 2 நெகிழ்ச்சி பரிசு

“நான் பேட்டிங் செய்து நீண்ட நாளாகி விட்டதால் களத்தில் நேரத்தை செலவிட்டு வெற்றியில் பங்காற்றியது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. உண்மையில் ஓமன் நன்றாக பவுலிங் செய்தனர். அவர்கள் பேட்டிங், பவுலிங் செய்த விதத்திற்கு பாராட்ட வேண்டும். பந்து ஸ்விங்கான பவர்பிளேவில் அவர்கள் நன்றாக பவுலிங் செய்தனர். இந்த ஃபார்மட்டில் நீங்கள் செட்டாக 2 பந்துகள் மட்டும் எடுத்துக்கொண்டு அடிக்க வேண்டும். நாட்டுக்காக நீங்கள் பங்காற்றும் எந்த பங்களிப்பிலும் நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு கற்றுக்கொண்டு தொடர்ந்து செல்ல வேண்டும்” என்று கூறினார்.

Advertisement