ஆஸ்திரேலிய தொடரிலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் சஞ்சு சாம்சன் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வருத்தம்

Sanju-Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டு இந்திய அணியிலிருந்து நிராகரிக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அப்போதே பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இருந்தது.

அதேபோன்று ரிஷப் பண்ட் காயம் அடைந்ததன் காரணமாக உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்ட வேளையில் சஞ்சு சாம்சன் நிராகரிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்ட வேளையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படி தான் தொடர்ச்சியாக இந்திய அணியில் நிராகரிக்கப்பட்டு வந்தாலும் தனக்கான வாய்ப்புக்காக சஞ்சு சாம்சன் கடுமையாக உழைத்து வருகிறார்.

- Advertisement -

அதேபோன்று நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் சஞ்சு சாம்சன் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் :

இதையும் படிங்க : உங்க இஷ்டத்துக்கு பிட்ச் தயாரிக்காதீங்க.. பிசிசிஐ’யை அடக்கிய ஐசிசி.. 2023 உ.கோ பிட்ச் தயாரிப்பு பற்றி 3 ரூல்ஸ் வெளியீடு

சிரிப்பது போன்று இருக்கும் ஸ்மைலியை அவர் எமோஜியாக பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பொறுமையாக அந்த வாய்ப்புக்காக காத்திருப்பேன் என்பது போன்று அவர் அந்த எமோஜி மூலம் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 13 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 55 ரன்கள் சராசரியுடன் 390 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement