13 வயது வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்ய காரணம் இதுதான் – சஞ்சு சாம்சன்

Vaibhav
- Advertisement -

கடந்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலத்தில் பங்கேற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் போட்டி போட்டு 1 கோடிய 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இப்படி 13 வயது வீரரை தொகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசிய சாம் சாம்சன் :

மேலும் இப்படி இளம் வயது வீரரான ஒருவரை ஏன் அந்த அணி தேர்வு செய்தது? என்பது குறித்த கேள்வியும் அனைவரது மத்தியிலும் இருந்தது. ஆனால் வைபவ் சூரியவன்ஷியின் செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாகவே நல்ல கருத்துக்கள் வெளியாகி வருவதால் அவரை தேர்வு செய்தது சரியான ஒரு முடிவு தான் என்றும் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் வைபவ் சூரியவன்ஷி பேட்டிங் செய்யும் வீடியோக்களை பார்த்துள்ளேன்.

அதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செலக்டர்ஸ் சென்னையில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா 19 வயது உட்பட்டோர் போட்டியை நேரில் பார்த்தனர். அந்த போட்டியில் விளையாடிய சூரியவன்ஷி சதம் அடித்திருந்தார். அவர் அடித்த சதத்தை விட அவர் விளையாடிய ஷாட்கள் தான் அவரை ஸ்பெஷல் பிளேயராக எங்களது அணியின் நிர்வாகிகளுக்கு காட்டி இருக்கிறது.

- Advertisement -

அதன் காரணமாகவே அவர்கள் வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியுள்ளனர். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல் போன்ற வீரர்களை மிக இளம் வயதிலேயே அணிக்குள் கொண்டு வந்து அவர்களை தற்போது இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு முன்னேற்றியுள்ளது.

இதையும் படிங்க : டிராவிஸ் ஹெட் தொல்லை இனிமேல் இருக்காது.. இதை செஞ்சு அவுட்டாக்குவோம்.. திட்டம் பற்றி ஆகாஷ் தீப்

அந்த வகையில் வைபவ் சூர்யவன்ஷியை மிக இளம் வயதிலேயே கண்டெடுத்துள்ளது. ஐபிஎல் தொடரை வெல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோன்று இந்திய அணிக்கு தரமான வீரர்களை அனுப்பவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த செயல்களை மேற்கொண்டு வருவதாக சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement