டிராவிஸ் ஹெட் தொல்லை இனிமேல் இருக்காது.. இதை செஞ்சு அவுட்டாக்குவோம்.. திட்டம் பற்றி ஆகாஷ் தீப்

Aakash Deep 2
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 3 தொடரின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் இருக்கிறது. இதை அடுத்து 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்குகிறது. அப்போட்டியில் வென்று இந்தத் தொடரையும் இந்தியா கைப்பற்ற வேண்டுமெனில் டிராவிஸ் ஹெட்டை விரைவாக அவுட்டாக்க வேண்டியது அவசியமாகிறது.

ஏனெனில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 உலகக்கோப்பை ஃபைனல்களில் சதமடித்த அவர் இந்தியாவில் தோற்கடித்தார். அதே போல இத்தொடரில் கடந்த 2 போட்டிகளில் சதத்தை அடித்த அவர் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவுக்கு தனி ஒருவனாக ஆட்டத்தை காண்பித்து வருகிறார். அவரை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வருடக்கணக்கில் தடுமாறி வருகிறது.

- Advertisement -

இனிமேல் தொல்லை இருக்காது:

இந்நிலையில் டிராவிஸ் ஹெட்டை விரைவில் அவுட்டாக்க இந்திய பவுலர்கள் இம்முறை புதிய திட்டங்களை வகுத்து வருவதாக ஆகாஷ் தீப் கூறியுள்ளார். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக வீசி அவரை அவுட்டாக்குவோம் என்று ஆகாஷ் தீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் எங்களுடைய திட்டங்களை வெளியே சொல்ல முடியாது”

“உங்களுடைய பவுவலர்கள் தகுந்த திட்டங்களை தயார் செய்து வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக நாங்கள் ஒரே மாதிரியான நல்ல பந்துகளை வீசி கட்டுப்பாட்டை தொடர்வது அவசியம். ஓவர் மற்றும் அரௌண்ட் தி விக்கெட் திசைகளில் இருந்து நாங்கள் வீசுவோம். பிட்ச் மற்றும் சூழ்நிலைகளை அறிந்து அதற்குத் தகுந்தார் போல் திட்டங்களை வகுப்போம். டிராவிஸ் ஹெட் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக தடுமாறுகிறார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

தயாராகும் இந்தியா:

“இம்முறை நாங்கள் அவரை வெள்ளைக் கோட்டுக்குள் செட்டிலாக விடமாட்டோம். நான் பெரும்பாலான கிரிக்கெட்டை இந்தியாவில் மட்டுமே விளையாடியுள்ளதால் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. இந்தியாவில் ஷார்ட் லென்த்துகளை நாங்கள் வீசுவோம். ஆனால் இங்கே அது கொஞ்சம் சவாலாக இருக்கிறது”

இதையும் படிங்க: அஸ்வினை மரியாதையா நடத்தல.. சோகமான நாள்.. சுந்தர் உட்பட யாரும் நிரப்ப முடியாது.. பிரசன்னா பேட்டி

“இருப்பினும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நீங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது அவசியம்” என்று கூறினார். முன்னதாக ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக கடந்த போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தார். அத்துடன் பும்ராவுடன் சேர்ந்து பேட்டிங்கில் 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் இந்தியாவை ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement