கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியன் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார். அப்படி தான் அறிமுகமான முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஷர்துல் தாகூருக்கு எதிராக சிக்சரை அடித்து தனது கரியரை துவங்கிய அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 35 பந்துகளில் அதிவேக சதம் அடித்து இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தி இருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் குறித்து பேசிய : சஞ்சு சாம்சன்
இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் அண்டர் 19 உலக கோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்திய அணி கோப்பையை மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இப்படி மிக இளம் வயதிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் அவரது திறமையை பாராட்டி ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற பிசிசிஐ விருது விழாவில் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான சஞ்சு சாம்சன் ஐபிஎல் போட்டிகளில் வைபவ் சூர்யவன்சி அறிமுகமானது குறித்து சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
வைபவ் சூர்யவன்சி அறிமுகமாகும் போட்டிக்கு முந்தைய நாள் இரவு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை தனது அறைக்கு அழைத்தார். அப்போது மிகவும் சிறிய வயது வீரர் என்பதனால் அவருக்கு ஆலோசனைகளை வழங்கலாம் என டிராவிட் நினைத்தார். அப்போது டிராவிட் அவரிடம் : நாளை உனது முதல் போட்டிக்கான பிளான் என்ன? என்று கேட்டார்.
இதையும் படிங்க : 7 நாள் ஆகியும் இந்த விடயத்தை நம்ப முடியல.. பரிசளிப்பு விழாவின் போது பேசிய – சஞ்சு சாம்சன்
அதற்கு பதிலளித்த சூரியவன்ஷி ஸ்பெஷலாக ஒன்றுமில்லை சார். முதல் பந்தே எனது ஏரியாவுக்குள் வந்தால் அதை அப்படியே தூக்கி சிக்சருக்கு அனுப்பி விடுவேன் என்று சாதாரணமாக கூறினார். அவர் சொன்னபடியே முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது திறமையும் நிரூபித்தார். அவர் தற்போது அவருடைய கேமை விளையாடிக் கொண்டிருக்கிறார் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



