7 நாள் ஆகியும் இந்த விடயத்தை நம்ப முடியல.. பரிசளிப்பு விழாவின் போது பேசிய – சஞ்சு சாம்சன்

Sanju Samson
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும் மூன்று அரை சதத்துடன் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 321 ரன்கள் குவித்து இந்த டி20 உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனையை நிகழ்த்தியிருந்தார். அதோடு அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

7 நாட்கள் ஆகியும் என்னால் நம்ப முடியவில்லை : சஞ்சு சாம்சன்

நடைபெற்று முடிந்த இந்த 2026 டி20 உலக கோப்பை லீக் சுற்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத அவருக்கு முக்கிய நேரத்தில் அணியின் காம்பினேஷன் காரணமாக வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு கோப்பையையும் பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றிக்கு பிறகு சஞ்சு சாம்சனை தொடர்ந்து இந்திய டி20 அணியில் விளையாட வைக்க வேண்டும் என்ற ஆதரவு மட்டுமின்றி பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணிக்கு விருது வழங்கும் விழாவும் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விருது விழாவில் பேசிய சஞ்சு சாம்சன் இந்த டி20 உலக கோப்பை தொடரை வென்று ஏழு நாட்கள் ஆகியும் இந்த வெற்றியை என்னால் முழுமையாக உணர முடியவில்லை என்று சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உலக கோப்பையில் என்னுடைய கவனம் முழுவதுமே இந்திய அணியின் வெற்றியின் மீது தான் இருந்தது.

அணிக்கு என்ன தேவையோ அதனை சிந்தித்து அதற்கேற்றார் போல் செயல்பட்டேன். சஞ்சு அணிக்கு நீ தேவை உன்னால் முடிந்த அனைத்தையும் செய் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. அங்கிருந்துதான் நான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராகி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினேன். இந்திய அணி கோப்பையை வென்று ஏழு நாட்கள் ஆகிவிட்டது. அந்த வெற்றியை என்னால் இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : என்னுடைய அடுத்த இலக்கு அந்த கோப்பை தான்.. பி.சி.சி.ஐ விருத்தி விழாவில் – சுப்மன் கில் பேச்சு

காலையில் எழுந்தால் நிஜமாகவே இது நடந்ததா? என தோன்றுகிறது. தற்போதுள்ள இந்திய அணி மிகச் சிறப்பான அணி எனவே இந்த உலக கோப்பையை நாம் வென்றதோடு நின்று விடாது. நம்மிடம் இருக்கும் திறமையான வீரர்களின் தரத்தை பார்க்கும்போது இந்திய அணிக்கு இன்னும் பல்வேறு கோப்பைகள் அடுத்தடுத்து வரும் என்று நினைப்பதாக சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement