அண்மையில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்போடு இந்திய அணி தயாராக இருக்கிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
எங்களுடைய அடுத்த இலக்கு இதுதான் : சுப்மன் கில் பேச்சு
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ வழங்கும் விருது விழா ஒன்று தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விருது விழாவில் 2025 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதோடு ராகுல் டிராவிடுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விருது விழாவின் போது இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான சுப்மன் கில் அடுத்த 2027 ஒருநாள் உலக கோப்பையை வெல்வதே தன்னுடைய இலக்கு என்று சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நிச்சயமாக எங்களுடைய அடுத்த முக்கியமான இலக்கு 2027 ஒருநாள் உலக கோப்பை தான். ஏனெனில் கடந்த முறை இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையை மிக அருகில் நெருக்கமாக வந்து தவற விட்டோம். எனவே தென்னாப்பிரிக்காவில் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.
இதையும் படிங்க : 3 டக் அவுட்டாகியும் அபிஷேக் சர்மாவை நீக்காதது ஏன்? கம்பீர் கொடுத்த விளக்கம் – விவரம் இதோ
அந்த நாட்டின் சூழ்நிலை மற்றும் மைதானத்தின் தன்மை ஆகியவற்றை மிகச் சிறப்பாக தகவமைத்து அதற்கு ஏற்றார் போன்று விளையாடி ஒருநாள் உலக கோப்பை வெல்வது எங்களுடைய இலக்கு. எனக்குள் இந்த எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது .கடந்த முறை 2023-ல் தவறவிட்டதை இம்முறை கைப்பற்ற விரும்புகிறோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



