இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பதால் அவர் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இந்த தொடரின் ஆரம்பத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த டி20 உலக கோப்பை தொடரானது அவருக்கு ஒரு ஏற்றத்தாழ்வான தொடராகவே அமைந்தது.
அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து பேசிய : கவுதம் கம்பீர் :
குறிப்பாக லீக் சுற்று போட்டிகளின் மூன்று ஆட்டங்களில் டக் அவுட்டான அவர் சூப்பர் 8 சுற்றின் போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அதற்கடுத்து இறுதி ஆட்டத்திலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக 21 பந்துகளில் 52 ரன்கள் குறித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். இப்படி தொடரின் ஆரம்பத்திலேயே அவர் அடுத்தடுத்து மூன்று டக் அவுட்டானதினால் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் இருந்து வந்தது.
ஆனால் அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்த இந்திய அணி நிர்வாகம் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு வழங்கவே இறுதிப் போட்டியில் அதிரடியான அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கும் அவர் வழி வகுத்திருந்தார். இந்நிலையில் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குறித்து தற்போது டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியதாவது :
2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் இவரை விட ஒரு மோசமான அனுபவத்தை சந்தித்தேன். அதாவது மூன்று போட்டியில் டக் அவுட்டானது மட்டுமின்றி நான்காவது போட்டியிலும் டக் அவுட்டானேன். இப்படி எனக்கே ஒரு மோசமான நிகழ்வு இருக்கிறது. நான் அபிஷேக்சர்மாவிடம் கூறியது : மக்கள் உங்களின் பார்ம் குறித்து பேசுவார்கள். அதனால் நீங்கள் பார்மில் இல்லை என்பது அர்த்தமல்ல. ரன் எடுக்கவில்லை அவ்வளவுதான்.
இதையும் படிங்க : இதுவெறும் துவக்கம் மட்டும் தான்.. இனிதான் ஆட்டமே காத்திருக்கு.. இந்திய அணியை வாழ்த்திய – ரோஹித் சர்மா
20 முதல் 40 பந்துகள் விளையாடினால் தான் உங்கள் பார்மையும், திறனையும் கணக்கிட முடியும் எனவே அடுத்து வரும் போட்டிகளில் முன்பு இருந்ததை விட ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அந்த வகையில் அபிஷேக் சர்மா தேவையான நேரத்தில் எங்களுக்கு ரன்களை அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார் என கௌதம் கம்பீர் பேசியது குறிப்பிடத்தக்கது.



