RR vs MI : அவரோட ஸ்பெஷல் இன்னிங்ஸ் தான் நாங்க தோக்க காரணம் – சஞ்சு சாம்சன் வருத்தம்

Sanju-Samson
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியானது நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

MI vs RR

- Advertisement -

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த அவர்கள் 212 ரன்களை குவித்து அசத்தினர். ராஜஸ்தான அணி சார்பாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 124 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 19.3 ஓவர்களின் நான்கு விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 55 ரன்களும், டிம் டேவிட் 45 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Tim David

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அவரை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று நினைத்தோம். அதே வேளையில் கடைசியில் டிம் டேவிட் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணிக்கு ஸ்பெஷலான ஒரு ஆட்டத்தை விளையாடியிருந்தார்.

- Advertisement -

இந்த மைதானத்தில் டியூ இல்லை என்றாலும் பந்தை துடைத்து வீசுமாறு கூறியிருந்தேன். அதன்படி எங்களது அணி வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது வருத்தம் தான். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் எங்களது பிராசஸில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்.

இதையும் படிங்க : IPL 2023 : எப்போவுமே பிறந்தநாளில் வண்டி ஓடாது, 2009 முதல் சுமாராக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மாவை – கலாய்க்கும் ரசிகர்கள்

நிச்சயம் இனி வரும் போட்டிகளில் எங்களது அந்த பிராசஸ் உங்களுக்கு தெரியும். அதோடு கடந்த போட்டியிலேயே ஜெய்ஸ்வால் 70 ரன்கள் குவித்ததால் நிச்சயம் இந்த போட்டியில் சதம் அடிப்பார் என்றும் நினைத்ததாக சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement