ஓப்பனர்கள் அதிரடியாக விளையாடியும் நாங்க தோக்க இதுவே காரணம் – வருத்தத்துடன் பேசிய சஞ்சு சாம்சன்

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது அதிரடியாக ஆட்டம் காரணமாக சிறப்பான துவக்கத்தை பெற்றது. முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 77 ரன்களை இந்த ஜோடி குவித்தது.

rcbvsrr

முதல் விக்கெட்டாக ஜெய்ஸ்வால் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் 37 பந்துகளை சந்தித்த லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 11.1 ஓவரில் 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் ராஜஸ்தான் அணி மிகப் பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சஞ்சு சாம்சன் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் வந்த யாரும் பெரிய அளவு ரன் குவிக்காததால் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 149 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 153 ரன்கள் குவித்த 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி சார்பாக பாராத் 44 ரன்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றோம். எங்களது துவக்க வீரர்கள் மிகவும் அருமையாக விளையாடி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

lewis

ஆனால் நாங்கள் அதனை முன்கொண்டு செல்ல தவறிவிட்டோம். எங்கள் அணியின் மிடில் ஆர்டரில் இன்னும் பலம் தேவை. கடந்த ஒருவாரம் எங்களுக்கு மிகவும் கடினமாக சென்றது. நாங்கள் நல்ல போட்டிகளிலும் விளையாடியிருந்தாலும் வெற்றி எங்கள் பக்கம் கிடைக்கவில்லை. இந்த போட்டியில் மைதானம் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாட முடியாமல் போனது.

இதையும் படிங்க : ஒரு மேட்ச் கூட ஆடல. அதுக்குள்ள ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர் – அடப்பாவமே

இருப்பினும் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் எங்களிடம் தோற்பதற்கு ஒன்றும் இல்லை. எனவே இனிவரும் போட்டிகளில் நாங்கள் நிச்சயம் சுதந்திரமாகவும், அதிரடியாகவும் விளையாடுவோம் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement