ஒரு மேட்ச் கூட ஆடல. அதுக்குள்ள ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர் – அடப்பாவமே

Arjun
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடதுகை பேட்ஸ்மேன் ஆகவும், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகவும் இருந்து வருகிறார். ஆல்ரவுண்டரான அவர் மும்பை அணிக்காக இந்த ஆண்டு ஜனவரி மாதம் சையத் முஷ்டாக் அலி தொடரில் ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை உள்ளூர் தொடரில் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது அடிப்படையான 20 லட்சத்திற்கு அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே இந்திய அணிக்காக வலைப் பயிற்சியில் பந்துவீசி உள்ள அவர் கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நெட் பவுலராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு முறைப்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வாகி ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாட இருந்த அவருக்கு இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் மும்பை அணியின் குழுவிலிருந்து அவர் பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் இருந்து வெளியேறுவதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

arjun tendulkar

மேலும் அவருக்கு பதிலாக சிமர்ஜித் சிங் மும்பை அணியில் இணைகிறார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்த்த வேளையில் அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அதே சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் மும்பை அணியின் ஆலோசகராக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Simarjeet

அர்ஜுன் டெண்டுல்கருக்கு பதிலாக இடம்பெற்றுள்ள சிமர்ஜித் சிங் 2018 ஆம் ஆண்டு ரஞ்சி போட்டிகளில் அறிமுகமானவர். அதுமட்டுமின்றி ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை சென்றபோது ரிசர்வ் வீரராகவும் அவர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement