கடைசில இப்படி தோத்தது உண்மையிலே ரொம்ப கஷ்டமா இருக்கு.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – சாம்சன் வருத்தம்

Samson
- Advertisement -

ஜெய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது குஜராத் அணியிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பெற்றுள்ளது. அதோடு சொந்த மண்ணில் குஜராத் அணியிடம் தோல்வியை பறிகொடுத்த ராஜஸ்தான் இறுதிப்பந்தி வரை போராடியது ரசிகர்கள் ரசிகர்களை சுவாரசியத்தை அளித்தது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது குஜராத் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 196 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இதன் காரணமாக மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

அதே வேளையில் இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான அணி இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்த போட்டியின் கடைசி பந்தில் தான் நாங்கள் தோல்வியை சந்தித்தோம்.

- Advertisement -

இப்படி ஒரு தோல்வி ஏற்பட்டது குறித்து பேசுவது மிகவும் கடினமானது. ஏனெனில் ஒரு கேப்டனாக ஒரு போட்டியை தோற்கும் போது எந்த இடத்தில் நாம் தோற்றோம் என்று கூறுவது மிகவும் கடினம். உண்மையிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி பந்தில் போட்டியை வென்றுள்ளனர்.

இதையும் படிங்க : கடைசி 3 ஓவர்ல எங்ககிட்ட இருந்த பிளான் இதுதான்.. நல்லபடியா முடிஞ்சதுல ஹேப்பி – சுப்மன் கில் மகிழ்ச்சி

நான் களத்தில் நின்று பேட்டிங் செய்தபோது 180 ரன்கள் வரை இருந்தால் அதுவே போதும் என்று நினைத்தேன். ஆனால் 196 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ஸ்கோர் தான் இருந்தாலும் குஜராத் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி எங்களுக்கு தோல்வியை பரிசளித்துள்ளனர் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement