கடைசி 3 ஓவர்ல எங்ககிட்ட இருந்த பிளான் இதுதான்.. நல்லபடியா முடிஞ்சதுல ஹேப்பி – சுப்மன் கில் மகிழ்ச்சி

Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த வகையில் நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது குஜராத் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக சஞ்சு சாம்சன் 68 ரன்களையும், ரியான் பராக் 76 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது சரியாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 குவித்து இறுதிப்பந்தில் பவுண்டரியுடன் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 72 ரன்களையும், சாய் சுதர்சன் 35 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் :

- Advertisement -

கடைசி மூன்று ஓவர்களின் போது 45 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். அதைத்தான் நாங்கள் மனதில் வைத்து விளையாடினோம். அதேபோன்று கடைசி மூன்று ஓவர்களில் களத்தில் இருக்கும் இரண்டு பேர் 9 பந்துகளில் 22 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற கணக்கும் இருந்தது. அந்த நேரத்தில் நிச்சயம் எங்களால் போட்டியை முடிக்க முடியும் என்று நினைத்தேன். அந்த வகையில் ராகுல் திவாதியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் மிகச் சிறப்பாக போட்டியை முடித்துக் கொடுத்தனர்.

இதையும் படிங்க : 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ரோஹித் சர்மா விளையாடப்போகும் அணி குறித்து பேசிய – அம்பத்தி ராயுடு

கடைசி பந்தில் வெற்றி பெறுவது என்பது ஒரு சிறப்பான உணர்வு. அந்த வகையில் இந்த போட்டியிலும் நாங்கள் அவ்வாறு வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. ரஷீத் கான் போன்ற ஒரு வீரர் எப்போதுமே அணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். ஏனெனில் அவர் ஒரு போராட்ட குணம் நிறைந்தவர் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement