2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ரோஹித் சர்மா விளையாடப்போகும் அணி குறித்து பேசிய – அம்பத்தி ராயுடு

Rayudu-and-Rohit
- Advertisement -

2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்து மும்பை அணி குறித்த சலசலப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்த சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை அந்த அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ரசிகர்கள் மத்தியில் மத்தயில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த கேப்டன்சி மாற்றம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சக வீரர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வரும் ரோகித்துக்கு களத்தில் கேப்டனாக இருக்கும் ஹார்டிக் பாண்டியா மரியாதை கொடுக்கவில்லை என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

- Advertisement -

அதன்காரணமாக ஹார்டிக் பாண்டியா தலைமையில் ஒரு தனி அணியும், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக ஒரு அணியும் இருப்பதால் மும்பை அணிக்குள் பிளவு இருக்கிறது என்று கூட பேசப்பட்டு வருகிறது. அதோடு சக வீரர்கள் மத்தியில் பாண்டியா காட்டும் ஆட்டிடியுடும்
அதிகளவு விமர்சனத்தை பெற்று வருகிறது.

அதோடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் நிச்சயம் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறி வேறொரு அணிக்காக விளையாடுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு ரோஹித் சர்மா அடுத்த ஆண்டு வேறு அணிக்கு கட்டாயம் சென்று விடுவார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா எந்த அணிக்கு சென்றாலும் அவரை வாங்கிக் கொள்ள மற்ற எல்லா அணிகளும் தயாராக இருக்கின்றன. ஆனால் அவர் எந்த அணிக்கு செல்ல வேண்டும் என்பது அவருடைய முடிவு தான்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் விராட் கோலி இடம்பெறுவாரா? தேர்வுக்குழு தலைவர் – அகார்கர் பதில்

ஒரு வீரராகவும் கேப்டனாகவும் எல்லா அணிகளுமே அவரை வாங்க விரும்புவார்கள். மும்பை அணியை விட தன்னை மரியாதையாக நடத்தும் ஒரு அணிக்கு ரோகித் சர்மா நிச்சயம் இடம் மாறுவார். ஆனால் அந்த முடிவு அவருடையது என அம்பத்தி ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement