டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் விராட் கோலி இடம்பெறுவாரா? தேர்வுக்குழு தலைவர் – அகார்கர் பதில்

Agarkar-and-Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மே மாதம் 26-ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஜூன் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ஜூன் 29-ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் ஐசிசி-யின் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வானது ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று தெரிகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அந்த அணியில் இடம்பெறுவார்கள் என்று பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் அனுபவ வீரர் விராட் கோலி டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்ற ஒரு தகவலும் இருந்து வந்தது. ஏனெனில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வீரர்கள் விராட் கோலி தேர்வு செய்யப்பட வேண்டுமெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பேசப்பட்டது.

அதேபோன்று இனி டி20 போட்டிகளுக்கான அணியில் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட இருப்பதாலும், 35 வயதான விராட் கோலி நீக்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள தேர்வுக்கு தலைவர் அஜித் அகார்கர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலியை பாருங்கள் கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை அமைத்தவர் அவர். 10-15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த உடற்தகுதியை தொடர்ச்சியாக மெயின்டயின் செய்து வந்துள்ளார். அவர் களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். விராட் கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும்.

இதையும் படிங்க : பவர்பிளே சுமாரா இருந்துச்சு.. கடைசியில் அது எங்களுக்கு சாதகமா மாறியதால் ஜெயிச்சுட்டோம்.. சாய் சுதர்சன் பேட்டி

அணிக்குள் உடற்பகுதி என்பது அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றதில் விராட் கோலியின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். இப்படி விராட் கோலி குறித்து அஜித் அகார்கர் புகழ்ந்து பேசியுள்ளதால் நிச்சயம் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவது உறுதி.

Advertisement