பவர்பிளே சுமாரா இருந்துச்சு.. கடைசியில் அது எங்களுக்கு சாதகமா மாறியதால் ஜெயிச்சுட்டோம்.. சாய் சுதர்சன் பேட்டி

Sai Sudharsan 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தேதி ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. ஜெய்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 68* (38), ரியன் பராக் 76 (48) ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த குஜராத்துக்கு சாய் சுதர்சன் 35, மேத்தியூ வேட் 4, அபினவ் மனோகர் 1, விஜய் சங்கர் 16, ஷாருக்கான் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மறுபுறம் அதிரடியாக போராடிய கேப்டன் சுப்மன் கில் 72 (44) ரன்களில் அவுட்டானதால் குஜராத் வெற்றி கேள்விக்குறியானது. ஏனெனில் கடைசி 2 ஓவரில் குஜராத்துக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

அசத்திய ஹிட்டர்கள்:
ஆனால் அப்போது அதிரடியாக விளையாடிய ராகுல் திவாட்டியா 22 (11) ரன்களும் ரசித் கான் 24* (11) ரன்களும் விளாசி கடைசி பந்தில் ராஜஸ்தானின் வெற்றி பறித்தனர். அதனால் அதிகபட்சமாக குல்தீப் சென் 3, சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தும் ராஜஸ்தான் பரிதாபமாக முதல் தோல்வியை பதிவு செய்தது. இந்நிலையில் இப்போட்டியில் பவர் பிளே ஓவரில் அதிக ரன்கள் அடிக்க முயற்சித்தும் முடியவில்லை தமிழக வீரர் சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால் 2வது இன்னிங்ஸில் பிட்ச் சற்று பேட்டிங்க்கு சாதகமாக மாறியதால் ரசித் கான், திவாடியா போன்ற தங்களுடைய ஹிட்டர்கள் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்ததாகவும் சாய் சுதர்சன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் இன்னிங்ஸில் நாங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்தோம். ஆனால் கடைசியில் இந்த மகத்தான போட்டியை நாங்கள் வென்றோம்”

- Advertisement -

“கண்டிப்பாக பவர் பிளேவை நன்றாக அமைக்க வேண்டும் என்பது எங்களுடைய திட்டமாக இருந்தது. ஆனால் கடைசியில் அது சராசரியான பவர் பிளேவாக அமைந்தது. நாங்கள் சில அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் நம்பிக்கையை கொண்டிருந்த நாங்கள் கடைசியில் போட்டியை வென்றோம். ஆரம்பத்தில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை. ஆனால் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் அது கொஞ்சம் நன்றாக மாறியது”

இதையும் படிங்க: ரன்ரேட் எதுவா இருந்தாலும்.. இதை செஞ்சா ஃபினிசிங் பண்ணிடலாம்.. ஆட்டநாயகன் ரசித் கான் பேட்டி

“எனவே அது எங்களுடைய ஹிட்டர்கள் அடித்து நொறுக்குவதற்கு எளிதாக அமைந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. இது எங்களுக்கு திருப்பு முனையை கொடுத்துள்ளது. இதே போன்ற செயல்பாடுகளை நாங்கள் கொடுப்போம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் குஜராத் 6வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் ராஜஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

Advertisement