ஒரே ஆளா நின்னு எங்களை தோக்கடிச்சிட்டாரு.. தோல்விக்கு பிறகு டெல்லி அணி வீரரை – பாராட்டிய சஞ்சு சாம்சன்

Sanju Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

ஒரே ஆளா எங்களை அவர் தோக்கடிச்சிட்டாரு – சஞ்சு சாம்சன் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது. பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சரியாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

- Advertisement -

பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 4 ஆவது பந்திலேயே 13 ரன்கள் அடித்து அசத்தலான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் :

தற்போது காயம் சற்று சரியாகி விட்டதாக நினைக்கிறேன். காயம் காரணமாகவே என்னால் மீண்டும் பேட்டிங் செய்ய வர முடியாமல் போனது. நாளை வலி எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்தே அடுத்த போட்டியில் விளையாடுவேனா? மாட்டேனா? என்பதை முடிவு செய்ய முடியும். இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதேபோன்று பீல்டர்களும் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.

- Advertisement -

இந்த இலக்கு நிச்சயம் சேஸிங் செய்யக்கூடிய ஒன்றுதான். பவர்பிளே ஓவர்களை நாங்கள் அதிரடியாக துவங்கியிருந்தோம். அதனால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி இலக்கை எட்டி விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் ஸ்டார்க் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டார். உலகின் தலைசிறந்த பௌலர்களில் ஒருவர் என்பதை இந்த போட்டியின் மூலம் மீண்டும் அவர் நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க : 4 வருடம்.. 188 ரன்ஸ்.. தெறிக்க விட்ட ஸ்டார்க்.. ராஜஸ்தானை சாய்த்த டெல்லி சூப்பர் ஓவரின் கில்லியாக சாதனை

ஒரே ஆளாக நின்று அவரே எங்களது அணியின் வெற்றியை 20 ஓவரில் பறித்துச் சென்றுவிட்டார். அவருக்கு எதிராக நாங்கள் கடுமையாக பேட்டை சுழற்ற நினைத்தோம். ஆனால் கடைசி சில ஆண்டுகளாக அவர் மிகச் சிறப்பான பந்துவீசி வருவதால் அவருக்கு எதிராக எங்களால் அழுத்தத்தை கொடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளோம் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement