ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி 32வது போட்டி நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவரில் போராடி 188-5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49, ராகுல் 38, ஸ்டப்ஸ் 34*, கேப்டன் அக்சர் பட்டேல் 34, அசுட்டோஸ் சர்மா 11* ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஜோக்கா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணியும் 20 ஓவரில் சரியாக 188-4 ரன்கள் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. அந்த அணிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 51 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
4 வருடம் கழித்து திரில்லர்:
மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் சாம்சன் 31* (19) ரன்னில் காயத்தால் வெளியேறினார். மிடில் ஆர்டரில் ரியன் பராக் 8 ரன்னில் அவுட்டானாலும் நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி 51 (28) ரன்கள் அடித்து முக்கிய நேரத்தில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் துருவ் ஜூரேல், ஹெட்மையர் அதிரடியாக விளையாடி போராடியதால் வெற்றியை நெருங்கிய டெல்லிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆனால் அந்த ஓவரில் அபாரமாக பவுலிங் செய்த ஸ்டார்க் 1, 1, 2, 2, 1 ரன்கள் மட்டுமே கொடுத்து தெறிக்க விட்டதால் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அதை எதிர்கொண்ட துருவ் ஜூரேல் 26 ரன்னில் சிங்கிள் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானதால் 4 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் சூப்பர் ஓவர் வந்தது. ஹெட்மையர் 15* (9) ரன்கள் அடித்தும் ஃபினிஷிங் செய்யவில்லை.
சூப்பர் ஓவரின் கில்லி:
அடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் ஸ்டார்க்கிற்கு எதிராக ஹெட்மையர் 0, 4, 1 ரன்கள் எடுத்தார். நோபாலில் பவுண்டரி அடித்த ரியன் பராக் 4வது பந்தில் ரன் அவுட்டாக அடுத்த பந்திலேயே ஹெட்மையரும் ரன் அவுட்டானார். அதனால் ராஜஸ்தான் 11/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டெல்லிக்கு சந்தீப் சர்மாவுக்கு எதிராக ராகுல் 2, 4, 1 ஸ்டப்ஸ் 6 அடித்து திரில் வெற்றி கொடுத்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்காகவும் அவருக்காகவும் தான் செஞ்சேன்.. 2025 சிட்னி டெஸ்டில் தன்னையே நீக்கியது ஏன்? ரோஹித் விளக்கம்
இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் பஞ்சாப் நான்காவது முறையாக சூப்பர் ஓவரில் வென்றுள்ளது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சரித்திர சாதனையை டெல்லி படைத்துள்ளது. இதற்கு முன் பஞ்சாப் 3 சூப்பர் ஓவரில் வென்றதே முந்தைய சாதனை. அதனால் ஐபிஎல் சூப்பர் ஓவரில் டெல்லி கில்லியாக செயல்பட்டு வருகிறது என்றே சொல்லலாம்.



