இந்தியாவுக்காகவும் அவருக்காகவும் தான் செஞ்சேன்.. 2025 சிட்னி டெஸ்டில் தன்னையே நீக்கியது ஏன்? ரோஹித் விளக்கம்

Rohit Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா அதன் பின் ரோஹித் தலைமையில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதற்கிடையே மிடில் ஆர்டரில் திணறிய ரோஹித் சர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியும் அரை சதத்தை கூட அடிக்காமல் தடுமாறினார்.

அதன் காரணமாக விமர்சனங்களை சந்தித்த அவர் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொண்டார். அதனால் ஒரு டெஸ்ட் போட்டியில் தன்னைத் தானே நீக்கிக் கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையையும் ரோஹித் படைத்தார். அவருக்கு பதிலாக பும்ரா தலைமையில் விளையாடிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சுயநலமற்ற முடிவு:

அதனால் 3 – 1 (5) என்ற கணக்கில் 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவிடம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியது. முன்னதாக கௌதம் கம்பீருடன் ஏற்பட்ட சண்டையாலேயே ரோஹித் கடைசிப் போட்டியில் நீக்கப்பட்டதாக செய்திகள் வலம் வந்தன. ஆனால் இந்தியாவின் நன்மைக்காகவும் சுப்மன் கில் விளையாட வேண்டும் என்பதற்காக மட்டுமே தம்மைத்தாமே நீக்கிக் கொண்டதாக ரோகித் கூறியுள்ளார்.

இது பற்றி ரோஹித் பேசியது பின்வருமாறு. “அடிலெய்ட் போட்டி எனக்கு நன்றாக அமையவில்லை. அதனால் நான் துவக்க வீரராக விளையாடியிருக்க வேண்டும் என்று கருதினேன். அது என்னுடைய இடம் என்பதால் அங்கே வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி விளையாட விரும்பினேன். இருப்பினும் 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருந்ததால் ஒரு போட்டியில் பரவாயில்லை என்று நினைத்தேன்”

- Advertisement -

ரோஹித் விளக்கம்:

“அப்போது காபா போட்டி ட்ராவில் முடிந்த நிலையில் மெல்போர்ன் போட்டியில் துவக்க வீரராக விளையாட விரும்பினேன். ஆனால் அந்தப் போட்டியில் நான் பந்தை நன்றாக அடிக்கவில்லை. எனவே ஏதோ ஒரு வகையில் நல்ல வீரரான சுப்மன் கில் விளையாடுவதை நாங்கள் விரும்பினோம். 4வது போட்டியில் அவர் விளையாடவில்லை. சரி நம்மால் நன்றாக பேட்டிங் செய்ய முடியவில்லை. அந்த நிலைமை 5 – 10 நாட்களில் மாறலாம் என்று நினைத்தேன்”

இதையும் படிங்க: ஏதாச்சும் சொல்லிட போறேன்.. ஐபிஎல் – பிஎஸ்எல் எது பெஸ்ட்? பாக் செய்தியாளர் கேள்வியை சாடிய சாம் பில்லிங்ஸ்

“எனவே கில்லை விளையாட வைப்பதற்காக பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களிடம் விவாதம் இருந்தது. நீங்கள் எப்போதும் அணியை முன்னிறுத்தி அதற்குத் தகுந்தார் போல் முடிவெடுக்க வேண்டும். சில நேரங்களில் அது வேலை செய்யலாம். சில நேரங்களில் செய்யாமல் போகலாம். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கண்டிப்பாக வெற்றியைக் கொடுக்கும் என்ற கேரண்டி கிடையாது” எனக் கூறினார்.

Advertisement