2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நெருங்கி வரும் வேளையில் இந்த ஆண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சஞ்சு சாம்சனே கேப்டனாக வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வரும் அவர் இந்த ஆண்டும் அந்த அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை கொண்டு செல்வார் என்று அந்த அணியின் நிர்வாகமும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
டிராவிட் என்னை இப்படித்தான் தேர்வு செய்தார் : சஞ்சு சாம்சன்
மேலும் ராஜஸ்தான் அணியின் வீரர்கள் அனைவரும் முன்கூட்டியே தங்களது பயிற்சிகளையும் ஆரம்பித்து விட்டனர். எதிர்வரும் 18-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து மார்ச் 23-ஆம் தேதி விளையாட இருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டன்சி செய்திருந்த டிராவிட் தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியின் பயிற்சியாளராக திரும்பி இருப்பது அந்த அணி நிர்வாகத்திற்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2012-13 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ராகுல் டிராவிட் தன்னை எவ்வாறு தேர்வு செய்தார்? என்பது குறித்த சில சுவாரஸ்யமான கருத்துக்களை தற்போதைய கேப்டன சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : 2012-13 சீசனின் போது டிராவிட் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
அப்போது நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் நான் மிகச் சிறப்பாக விளையாடி வந்தேன். இளம் வீரரான என்னுடைய ஆட்டத்தில் உள்ள திறனை சரியாக புரிந்து கொண்ட டிராவிட் சார் என்னிடம் வந்து : “ஓகே, நீ என்னுடைய அணிக்காக விளையாடுகிறாயா?” என்று கேட்டார். அதன் பின்னர் அவரே எனக்கு அறிமுக வாய்ப்பையும் வழங்கினார்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் 2025 தொடரின் முதல் போட்டியை தவறவிடும் ஹார்டிக் பாண்டியா – என்ன காரணம்?
தற்போது நான் கேப்டனாகவும் அவர் பயிற்சியாளராகவும் வந்திருப்பது அளப்பரிய மகிழ்ச்சி அளித்துள்ளது. ஏற்கனவே ராகுல் டிராவிட் சாருடன் நான் நீண்ட காலம் பயணித்திருக்கிறேன். அவரிடம் இருந்து பல்வேறு விடயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



