ஐ.பி.எல் 2025 தொடரின் முதல் போட்டியை தவறவிடும் ஹார்டிக் பாண்டியா – என்ன காரணம்?

Pandya
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இந்தியா மட்டுமின்றி உலகளவில் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடரின் 18 ஆவது சீசனானது வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே முழுமையாக வெளியிடப்பட்டு விட்டது.

முதல் போட்டியை தவறவிட இருக்கும் ஹார்டிக் பாண்டியா :

இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அதற்கு அடுத்து இந்த 2025 ஐபிஎல் தொடரின் இரண்டாவது மிகப்பெரிய போட்டியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த முதல் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக சூரியகுமார் முதல் போட்டியை கேப்டனாக வழி நடத்துவார் என்றும் தெரிகிறது. இதற்கு காரணம் யாதெனில் :

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது அடுத்தடுத்து சில போட்டிகளில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மும்பை அணி தண்டிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மும்பை அணி ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறையை மீறியதால் அந்த அணியிலன் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியை ஹார்டிக் பாண்டியா தவறவிட இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய மும்பை அணியானது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியிருந்த வேளையில் இம்முறை மீண்டும் கோப்பையை எட்டிப்பிடித்து ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்காக அந்த அணி தற்போது தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மும்பை அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு.. தாமதமாகும் பும்ராவின் ரிட்டர்ன் – மெடிக்கல் ரிப்போர்ட் கூறுவது என்ன?

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான ஹார்டிக் பாண்டியா இதுவரை 137 போட்டிகளில் விளையாடி 2525 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 64 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement