- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அணியில் இடம்பிடித்தது முக்கியமல்ல. இதுதான் என் கனவு – சஞ்சு சாம்சன் பேட்டி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடித்தார். மேலும் ஐபிஎல் தொடரில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் இந்திய அணியில் இடம் பிடித்ததை அடுத்து அவருக்கு பல முன்னாள் வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இரட்டை சதம் விளாசி அணிக்கு தனது அழைப்பை அவர் இந்திய அணிக்கு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியில் அவர் தேர்வானது குறித்து அவர் கூறியதாவது :

- Advertisement -

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறங்கி என்னால் ஆட முடியும். மேலும் சமீப காலமாக எனது ஆட்ட முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மனரீதியாகவும் டெக்னீக்கள் ரீதியாக எனது ஆட்டத்தை நான் முன்னேற்றி ஆடி வருகிறேன். பயமில்லாத கிரிக்கெட் விளையாடி வருகிறேன் அதனை எப்போதும் தொடர்ந்து செய்வேன்.

இரட்டை சதம் அடித்தது எனக்கு சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு பந்தையும் வீணாக்காமல் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் இரட்டை சதம் அடிக்க முடிந்தது. இந்திய அணியில் இடம் கிடைத்தது முக்கியம் அல்ல இந்த இடத்தை தக்கவைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து நாட்டுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் இதுவே எனது கனவு அது எப்போது நடக்கும் என்று தெரியாது என்று சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by