- Advertisement -
ஐ.பி.எல்

8 மணி மேட்சுக்கு 5 மணிக்கு தான் எழுந்து வருவாரு.. ஹெட்மயரின் வித்தியாசமான குணம் பற்றி கூறிய – சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து ஒரு பிரத்தியேக உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சஞ்சு சாம்சன் மற்றும் அஸ்வின் ஆகியோர் தங்களது கரியரில் சந்தித்த பல்வேறு அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தனர். அப்படி இவர்கள் இருவரும் பேசிய அந்த உரையாடல் குறித்த பதிவுகள் தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகின்றன.

ஹெட்மயரின் பழக்கம் குறித்து பேசிய : சஞ்சு சாம்சன்

அந்த வகையில் அஸ்வின் ஏற்பாடு செய்த பிரத்யேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் தன்னுடன் விளையாடிய சக வீரரான ஷிம்ரன் ஹெட்மாயரின் ஒரு சில பழக்க வழக்கங்கள் குறித்து பேசியிருந்தார். அப்படி சஞ்சு சாம்சன் பேசிய விடயங்கள் பலரது மத்தயிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஹெட்மயர் குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் : நான் கேப்டனாவதற்கு முன்பு சில பழக்க வழக்கங்களை வைத்திருந்தேன். இரவு 10 மணிக்கு எல்லாம் தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்து பயிற்சிக்கு வருவேன். அதுமட்டுமின்றி சரியான உணவுப் பழக்கத்தையும், சரியான வாழ்க்கை நடைமுறையும் கடைபிடித்தால் தான் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும் என்று நினைத்து அதையே தொடர்ந்து செய்து வந்தேன்.

ஆனால் ஷிம்ரன் ஹெட்மயர் போன்ற வீரர்களை சந்தித்த பிறகு என்னுடைய அந்த எண்ணம் மாறியது. ஏனெனில் இரவு 8 மணிக்கு போட்டி என்றால் மாலை 5 மணிக்கு தான் அவர் தூக்கத்திலிருந்து எழுந்து வருவார். டீம் மீட்டிங்கின் போது கூட தூக்க கலக்கத்தில் தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார்.

- Advertisement -

ஆனால் களத்தில் போட்டி என்று வந்துவிட்டால் அணிக்கு தேவையான முக்கிய ரன்கள் அவரே அடித்து வெற்றி பெற்று தருவார். இப்படி ஒரு சில விடயங்களை பார்க்கும் போது தான் ஒரு வீரரின் ஒழுக்கத்தை விட களத்தில் நாம் வெளிப்படுத்தும் செயல்பாடும், நம்முடைய திறமையும் தான் முக்கியம் என்பதை உணர்ந்தேன் என்று ஹெட்மயரின் குணங்கள் குறித்து சாம்சன் பேசியிருந்தார்.

இதையும் படிங்க : தோனிக்கு பதில் சரியான சாம்சன்.. அவங்களோட ஏற்பட்ட சண்டையால் சிஎஸ்கே வந்தால் வாங்கலாம்.. ஸ்ரீகாந்த் பேட்டி

பொதுவாகவே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பலரும் இரவு நேரத்தில் பார்ட்டி செய்வது பகல் நேரத்தில் உறங்குவது என்று இருக்கும் வேளையில் ஷிம்ரன் ஹெட்மயரும் அதே போன்ற ஒரு பழக்கவழக்கத்தை வைத்திருப்பவர் என சஞ்சு சாம்சன் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

- Advertisement -