ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான ராஜஸ்தான் அணியிலிருந்து தம்மை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டதாக கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 2013 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான சாம்சன் நாளடைவில் இந்திய அணிக்காகவும் விளையாடினார். அதன் பின் வேறு சில அணிகளுக்காக விளையாடிய அவர் மீண்டும் ராஜஸ்தானுக்கு திரும்பிய போது கேப்டன்ஷிப் பதவி வழங்கப்பட்டது.
அந்த வாய்ப்பில் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு (2008) பின் ராஜஸ்தானை இறுதிப்போட்டிக்கு (2021) அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சாதனையை சாம்சன் படைத்தார். அப்போதிலிருந்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் சாம்சன் தற்போது ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற விரும்புவதாக செய்திகள் காணப்படுகின்றன. அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்ரேடிங் முறையில் வாங்குவதற்கு முயற்சித்து வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன.
ராஜஸ்தான் விடக்கூடாது:
இந்நிலையில் 2008க்குப்பின் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறுவதால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் ஏற்பட்ட சண்டையால் சாம்சன் வெளியேறுகிறாரா? என்று முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் வினவியுள்ளார். தம்மைப் பொறுத்த வரை ராஜஸ்தான் அவரை கழற்றி விடுவது தவறான முடிவு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அதே சமயம் அவர் தோனிக்கு சரியான மாற்று வீரர் சிஎஸ்கே வாங்க வேண்டுமென தெரிவிக்கும் ஸ்ரீகாந்த் இது பற்றி பேசியது பின்வருமாறு. “செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது அவருக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அது எனக்கு முழுமையாக தெரியாது. ராஜஸ்தான் அணி சாம்சனை பல கோடிகள் கொடுத்து அவர்கள் தக்க வைத்தனர்”
தோனிக்கு சரியான மாற்று வீரர்:
“ராஜஸ்தான் அவரைச் சுற்றி தங்களுடைய அணியை உருவாக்கியுள்ளனர். எனவே திடீரென ஏன் நீங்கள் அவரை விடுவிக்க விரும்புகிறீர்கள்? அவரை விடுவித்தால் அணியின் சமநிலை என்னவாகும்? இங்கே 2008க்குப்பின் ராஜஸ்தான் கோப்பை வெல்லவில்லை என்பதையும் மறக்கக்கூடாது. இருப்பினும் இறுதிப் போட்டிக்குச் சென்றனர். எனவே ராஜஸ்தான் சாம்சனை விடக்கூடாது. ஒருவேளை ராஜஸ்தான் ரியன் பராக்கை கேப்டனாக்க விரும்பினால் அது அவர்களுடைய விருப்பம்”
இதையும் படிங்க: மிராக்கிள் வெற்றியை இந்தியா ஓவரா கொண்டாடம.. அங்க போனப்போ மெக்கல்லம் பாராட்டினாரு.. கருண் நாயர்
“ஆனால் நான் சாம்சனை 18 கோடிகள் கொடுத்து பேட்ஸ்மேனாக விளையாட வைப்பேன். அதே சமயம் சிறந்த வீரரான சஞ்சு சென்னையில் பிரபலமானவர். நல்ல பிராண்ட் இமேஜ் கொண்டுள்ளார். ஒருவேளை ராஜஸ்தானை விட்டு அவர் வெளியேற விரும்பினால் சென்னை வாங்க வேண்டும் என்று நான் சொல்வேன். அவர் தோனிக்கு சரியான மாற்று வீரர். தோனி அடுத்த வருடம் விளையாடி விட்டு மெதுவாக நகர்வார். ருதுராஜ் கேப்டனாக தொடர வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.



