- Advertisement -
ஐ.பி.எல்

தெறிக்கவிட்ட சஞ்சு சாம்சன்! ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக – மாஸ் சாதனை

மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மார்ச் 29-ஆம் தேதியன்று நடைபெற்ற 5-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனே நகரில் உள்ள பிரபல எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

மிரட்டிய சஞ்சு சாம்சன்:
இதில் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தபோது இளம் வீரர் ஜெய்ஸ்வால் அவுட்டாக அவருடன் பேட்டிங் செய்த ஜோஸ் பட்லர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு 28 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனால் ஓரளவு நிம்மதியடைந்த ஹைதராபாத் பவுலர்களை அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் டேவுட் படிக்கல் ஆகியோர் அதிரடியாக எதிர்கொண்டு மீண்டும் தொல்லை கொடுத்தனர். களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் 29 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 41 ரன்கள் எடுத்திருந்த போது படிக்கல் அவுட்டானார்.

ஆனால் அவருடன் விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஹைதராபாத் பவுலர்களை பந்தாடி சிக்சர் மழை பொழிந்தார் என்றே கூறலாம். மொத்தம் 27 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 5 இமாலய சிக்சர்கள் உட்பட அரைசதம் அடித்து 55 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் தன் பங்கிற்கு வெறும் 13 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 32 ரன்களை விளாசி அபார பினிஷிங் செய்ய அவருடன் ரியன் பராக் 12 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் ராயல் சாதனை:
இப்படி களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அதிரடி சரவெடியாக விளையாடி நல்ல ரன்களை குவித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த ராஜஸ்தான் அணி 210 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய இளம் வீரர் உம்ரான் மாலிக் மற்றும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் இதர ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை விட ஹைதராபாத் பவுலர்களை தெறிக்கவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 5 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்கள் விளாசி தனது அணிக்கு நல்ல ஸ்கோர் பதிவு செய்ய உதவினார்.

இப்போட்டியில் 5 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற புதிய சூப்பரான சாதனையை படைத்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர் அதன்பின் ஒரு சில வருடங்கள் டெல்லி அணிக்காக விளையாடிய பின் கடந்த 2018 முதல் தற்போது வரை தொடர்ந்து அந்த அணியில் விளையாடி வருகிறார். சமீப காலங்களாக அபாரமாக செயல்பட்டு வரும் அவரை நம்பிய ராஜஸ்தான் அணி நிர்வாகம் கடந்த வருடம் கேப்டன்சிப் பொறுப்பையும் ஒப்படைத்து.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2013 – 2015 வரை 5, 17, 8 சிக்சர்கள் 2018 – 2021 வரை 19, 13, 26, 17 சிக்சர்கள் என கடந்த வருடம் வரை ராஜஸ்தான் அணிக்காக 105 சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் 5 சிக்சர்களை அடித்து 110 சிக்ஸர்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனின் நீண்ட கால சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஒரு தசாப்தம் கழித்து ஐபிஎல் தொடரில் மீண்டும் கால்பதித்த வெளிநாட்டு வீரர் – இப்படியும் ஒரு சாதனையா

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:
1. சஞ்சு சாம்சன் : 110 சிக்ஸர்கள்*
2. ஷேன் வாட்சன் : 109 சிக்ஸர்கள்
3. ஜோஸ் பட்லர் : 67 சிக்ஸர்கள்
4. யூசுப் பதான் : 61 சிக்ஸர்கள்
5. அஜிங்கிய ரகானே : 53 சிக்ஸர்கள்

- Advertisement -
Published by