4 ஆவது போட்டியில் சைனியும், சுந்தரும் ஆடுவாங்கனா. இவரு ஆடமாட்டாரா ? ரொம்ப பாவம் இவரு – புலம்பும் ரசிகர்கள்

Samson-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் 179 ரன்களை அடிக்க ஆட்டம் டையில் முடிந்தது. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைக்க இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் தனது முதல் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

Shami 1

- Advertisement -

இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய கேப்டன் விராட் கோலி வில்லியம்சன் பேட்டிங் செய்த விதம் மற்றும் அவரது அணியை வழிநடத்தி விதம் ஆகியவற்றை புகழ்ந்து அவரே வெற்றிக்கு தகுதியானவர் என்று நினைப்பதாகவும் மேலும் அவர் நிலையில் இருந்து பார்த்தால் அவரது வருத்தத்தை அறிய முடிகிறது என்றும் அதனை தான் புரிந்து கொண்டதாகக் தெரிவித்தார். அதன் பின்னர் மேலும் பேசிய கோலி :

இந்த தொடரை நாங்கள் 5-0 என்ற கணக்கில் கைப்பற்ற முயற்சிப்போம் என்றும் எங்கள் அணியில் இரண்டு இளம் வீரர்கள் வாய்ப்புக்காக வெளியில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சுந்தர் மற்றும் சைனி ஆகியோர் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். இந்த யோசனை மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றியை கொடுக்கும் என்றும் நான் நம்புகிறேன் என்று கோலி கூறினார்.

இதனால் அடுத்த போட்டியில் சைனி மற்றும் சுந்தர் ஆகியோர் விளையாடுவார்கள் என்று உறுதி ஆகியுள்ள நிலையில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் நிலை வருத்தமளிக்கும் விடையமாக உள்ளது. ஏனெனில் கடந்த சில தொடர்களாகவே அணியில் இடம் பெற்று வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு மீண்டும் அவர் ஓரங்கட்டு விட்டார். இந்நிலையில் தவானுக்கு பதிலாக அணியில் இணைந்த அவருக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறி தான் என்று தெரிகிறது.

Samson

மேலும் இந்திய ரசிகர்கள் அனைவரும் சாம்சனுக்கு ஆதரவாகவும் அவரின் இந்த நிலைக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சாம்சன் விக்கெட் கீப்பராக இல்லை என்றாலும் ஒரு பேட்ஸ்மேனாக இறக்கி பரிசோதித்துப் பார்க்கலாம் என்றும் அவர் ஒரு திறமையான வீரர் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement