அவர் இல்லனா ஜெயிச்சுருக்க முடியாது.. இந்த விருதை அவருக்கு தான் கொடுக்கனும்.. ஆட்டநாயகன் சாம்சன் பேட்டி

Sanju Samson 2
- Advertisement -

விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 4வது லீக் போட்டியில் லக்னோவை 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 193/4 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82* (52), ரியன் பராக் 43 (29) ரன்கள் எடுத்தனர்.

லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 194 ரன்களை துரத்திய லக்னோவுக்கு குயிண்டன் டீ காக் 4, தேவ்தூத் படிக்கல் 0, ஆயுஸ் பதோணி 1, தீபக் ஹூடா 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போது ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் ஜோடி சேர்ந்து வெற்றிக்கு போராடினர்.

- Advertisement -

சாம்சனின் மனசு:
இருப்பினும் அதில் வேகமாக விளையாட தவறிய கேப்டன் கேஎல் ராகுல் 58 (44) ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது வந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 3 ரன்னில் அவுட்டானார். அதனால் எதிர்புறம் நிக்கோலஸ் பூரான் 64* (41) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவரில் லக்னோ 173/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த வெற்றிக்கு 82* ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இருப்பினும் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசி மொத்தம் 3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த சந்தீப் சர்மா தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று சஞ்சு சாம்சன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றி அவர் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “எப்போதும் களத்தில் நேரத்தை செலவிடுவது வேடிக்கையாக இருக்கும். அதில் வெற்றி பெறுவது இன்னும் ஸ்பெஷலாக இருக்கும்”

- Advertisement -

“எங்களிடம் சற்று வித்தியாசமான கலவை இருப்பதால் இம்முறை எனக்கு வித்தியாசமான வேலை கொடுக்கப்பட்டுள்ளது. சங்ககாரா சில பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு கொடுத்தார். 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடும் எனக்கு சில அனுபவங்கள் வந்துள்ளது. தற்போது சூழ்நிலைகளை புரிந்து கொள்ள நான் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியதும் எனக்கு உதவியது”

இதையும் படிங்க: 20 ரன்ஸ்.. ராஜஸ்தான் அசத்தல்.. கொஞ்சமும் மாறாமல் மீண்டும் தடவிய ராகுல்.. பூரான் போராட்டம் வீணானது எப்படி?

“இவை அனைத்தும் உங்களுடைய பலம் பலவீனத்தை புரிந்து கொள்வதாகும். நான் எப்போதும் பந்தை பார்த்து ரியாக்சன் கொடுக்கும் பேட்ஸ்மேன். அது முதல் பந்தாக இருந்தாலும் கடைசி பந்தாக இருந்தாலும் கவலையில்லை. இந்த விருதை நான் சந்தீப்புக்கு கொடுக்க வேண்டும். அவர் அந்த 3 ஓவர்களை சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் நான் ஆட்டநாயகனாக வந்திருக்க மாட்டேன். அழுத்தமான நேரங்களில் திறமை மட்டுமல்ல கேரக்டரரும் முக்கியம் என்று அஸ்வின் பாய் சொல்லி கேட்டுள்ளேன்” எனக் கூறினார்.

Advertisement