வருஷ கணக்கா உழைச்சேன்.. இளம் இந்திய வீரர்கள் அசத்த அவங்க தான் காரணம்.. ஆட்டநாயகன் சாம்சன் பேட்டி

Sanju Samson Press
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எதிராக நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்றதால் சமநிலையில் இருந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானித்த அப்போட்டி டிசம்பர் 21ஆம் தேதி பார்ல் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சஞ்சு சாம்சன் முதல் முறையாக சதமடித்து 108, திலக் வர்மா 52 ரன்கள் குவித்த உதவியுடன் 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்தது தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் டோனி டீ ஜோர்சி 81 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

சீனியர்களின் உத்வேகம்:
அதனால் ரோஹித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாபிரிக்காபை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்ற இந்தியா தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. மேலும் 2018க்குப்பின் 2வது முறையாக தென்னாபிரிக்க மண்ணில் ஒரு ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனையும் படைத்தது.

இந்த வெற்றிக்கு முதல் முறையாக சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மட்டுமின்றி கடந்த பல வருடங்களாக உழைத்த உழைப்பின் பரிசாக இப்போட்டியில் சதமடித்தது பெருமையை கொடுப்பதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் சிறப்பாக விளையாடி உயர்த்திய தரத்தை இளம் வீரர்கள் பின்பற்றி வெற்றியை பெற்றுக் கொடுத்து வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முடிவு வெற்றியாக கிடைத்ததால் இதை நினைத்து பெருமையாக இருக்கிறது. இதற்காக கடந்த சில மாதங்கள் மட்டுமல்லாமல் வருட கணக்கில் கடினமாக உழைத்து வருவதால் இது நல்ல உணர்வை கொடுக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் பிட்ச் மற்றும் பவுலர்களின் மனநிலையை அறிய உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும்”

இதையும் படிங்க: 2022 தோல்விக்கு பழி தீர்த்த ராகுல் படை.. வரலாற்றில் 2வது முறையாக தெ.ஆ மண்ணில் இந்தியா சரித்திரம் படைத்தது எப்படி?

“டாப் ஆர்டரில் விளையாடுவது எக்ஸ்ட்ரா 10 – 20 பந்துகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்பையும் கொடுக்கும். திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்திற்காக மொத்த நாடும் பெருமைப்படுகிறது. அவரிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம். இந்திய கிரிக்கெட்டில் சீனியர்கள் ஒரு தரத்தை உருவாக்கியுள்ளார்கள். அதை பின்பற்றி அடுத்ததாக வரும் ஜூனியர்கள் வேலை செய்கின்றனர். இங்கே பயணித்து ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒரு முறை விளையாடுவது எளிதல்ல. ஆனால் அதை அவர்கள் செய்துள்ளனர்” என்று கூறினார்.

Advertisement