
வங்கதேச அணி நவம்பர் மாதம் துவக்கத்தில் இந்தியா வந்து 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 அணி நேற்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
இதில் தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்த அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னனி வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு புதிய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் வீரரான சஞ்சு சாம்சன் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடாமல் இருக்கும் பண்டுக்கு இவரின் இடம் கடும் நெருக்கடியை அளிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2015 இந்திய அணியில் இடம் பிடித்த சாம்சனுக்கு அதன்பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தற்போது நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையிலும் இரட்டை சதமடித்து அசத்திய தனது திறமையை நிரூபிக்க சஞ்சு சம்சன் தற்போது அணியில் வாய்ப்பினைப் பெற்று உள்ளார்.
மேலும் உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் தொடர்ந்து சொதப்பிவரும் பண்ட் இன்னும் ஒரு போட்டியில் சோபிக்க தவறினாலும் சஞ்சு சாம்சன் அவரை இடத்தைத் அடிப்பது உறுதி மேலும் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் தொடர்ந்து அணியில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.