IND vs WI : நல்லவேளை காப்பாத்திடீங்க. நீங்க இல்லனா என்ன ஆயிருக்கும் – சாம்சனை புகழும் ரசிகர்கள்

Sanju-Samson
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் செய்த அற்புதமான விக்கெட் கீப்பிங் தற்போது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று ட்ரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமா தவான் 97 ரன்களையும், கில் 64 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளித்து போட்டி போட்டு ரன்குவித்து வந்தனர். ஆனாலும் இறுதியில் அவர்களால் 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 305 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கையில் மேயர்ஸ் மற்றும் ப்ரெண்டன் கிங் ஆகியோர் அரை சதம் அடித்து அவர்கள் அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றனர். ஆனாலும் போட்டியின் இறுதி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டபோது 11 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சந்தித்த அகில் ஹுசேன் ஒரு ரன்னை மட்டுமே அடித்தார்.

பின்னர் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரொமாரியோ செபர்டு நான்காவது பந்தை இரண்டு ரன்கள் அடித்தார். இதனால் போட்டியின் கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் முகமது சிராஜ் அந்த கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை வீச தயாரானார். அப்போது அவர் பந்து வீசுவதற்கு முன்னதாக ரொமாரியோ செபர்டு இடது புறமாக நகர்ந்ததால் பேட்ஸ்மனை பாலோ செய்து பந்துவீசிய முகமது சிராஜ் இடதுபுறம் ஒயிடாக வீசினார். ஆனால் பந்து மிகத் தொலைவாக சென்றதால் நிச்சயம் ஒயிடு மூலமாக பவுண்டரி செல்லும் என்றே தோன்றியது.

- Advertisement -

ஆனால் அந்த நேரத்தில் அற்புதமான டைவை அடித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அந்த பந்தினை அபாரமாக டைவ் அடித்து தடுத்தார். அவர் அந்த பந்தை தடுக்கவில்லை என்றால் நிச்சயம் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை கூட சந்தித்திருக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் அவர் அந்த பந்தினை தடுத்ததால் அடுத்த இரண்டு பந்துகளிலும் மூன்று ரன்கள் மட்டுமே அவர்களால் குவிக்க முடிந்ததால் இறுதியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க : IND vs WI : சச்சினின் தனித்துமான சாதனையை தகர்த்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றிய சுப்மன் கில் – முழுவிவரம்

ஒருவேளை சஞ்சு சாம்சன் அந்த பந்தினை தடுக்காமல் விட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியை கூட சந்தித்திருக்கலாம். எனவே சஞ்சு சாம்சனின் அந்த அற்புதமான டைவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் நல்லவேளை நீங்கள் மட்டும் இல்லை என்றால் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும். நமது அணியை காப்பாற்றி விட்டீர்கள் என்பது போன்ற கருத்துக்களை பகிர்ந்து சஞ்சு சாம்சனை வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement