IND vs WI : கே.எல் ராகுலுக்கு மாற்று வீரரை அறிவித்த அணி நிர்வாகம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

KL-Rahul
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதன்படி ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் நடைபெற இருந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர் போட்டி துவங்கும் ஒரு நாளுக்கு முன்னதாக காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். பின்னர் அவரது காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜெர்மனி நாட்டிற்கு சென்ற ராகுல் அங்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்பினார்.

kl rahul

- Advertisement -

இதன் காரணமாக அடுத்தடுத்து நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரையும் அவர் தவறவிட்டார். இந்நிலையில் காயத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறி மீண்டு வந்த கே.எல் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணியிலும் இடம் பிடித்திருந்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பயணிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன் காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இந்த ஒருநாள் தொடரையும் அவர் தவறவிட்டார். பின்னர் ஒருநாள் தொடரை தவறவிட்ட அவர் டி20 தொடரிலாவது விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த டி20 தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

Samson

அதன் காரணமாக கே.எல் ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் யார் மாற்று வீரராக இடம் பிடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது இன்று துவங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்பாக இந்திய அணியில் கே.எல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இணைந்துள்ளதாக இந்திய அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் சஞ்சு சாம்சன் தற்போது கடைசியாக தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளில் தன்னை தொடர்ச்சியாக நிரூபித்து வருவதால் அவரை டி20 அணியில் இந்திய அணி இணைத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரிலும் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : IND vs WI : ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் தோற்க அந்த 2 இந்திய வீரர்கள் தான் காரணம் – வெ.இ கோச் வெளிப்படையான பாராட்டு

இதனை சரியாக பயன்படுத்தி சஞ்சு சாம்சன் இனி இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் அற்புதமாக பேட்டிங் செய்யும் திறமையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement