இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியானது நேற்று சண்டிகாரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஷேன் வார்னேவின் சாதனையை தகர்த்த சஞ்சு சாம்சன் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்ததால் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் இதுவரை தங்கள் விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் ராஜஸ்தானி அணி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு சென்றுள்ளது. அதேவேளையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சஞ்சு சாம்சன் முன்னாள் ராஜஸ்தான் அணியின் கேப்டனான ஷேன் வார்னேவின் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக ஷேன் வார்னே 31 வெற்றியுடன் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அடைந்து வெற்றியின் மூலம் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக 32-வது வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்.
இதையும் படிங்க : ராஜஸ்தானிடம் 150, 110 டெட்லீ காம்போ இருக்கு.. இதை செஞ்சு பஞ்சாப்பை வீழ்த்திட்டோம்.. கேப்டன் சாம்சன் பேட்டி
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதல் மூன்று போட்டிகளிலும் காயம் காரணமாக இம்பேக்ட் வீரராக விளையாடியிருந்த வேளையில் நேற்றைய ஆட்டத்தில் தான் மீண்டும் கேப்டனாக திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.



