ஷர்துல் தாகூரை தூக்குனது ரைட். ஆனா இவரையும் ஏன் தூக்குனீங்க – மீண்டும் அணித்தேர்வு குறித்து காண்டான ரசிகர்கள்

Shardul-Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs NZ Kane Willamson Shikar Dhawan

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ஹேமில்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தீர்மானம் செய்துள்ளதால் தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதுவரை 4.5 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் குவித்து இருக்கும் வேளையில் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே கடந்த போட்டியில் முதல் 6-7 ஓவர்கள் சிறப்பாக வீசினாலும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட 40-ஆவது ஓவரை மோசமாக வீசியிருந்த ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த தேர்வு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Samson

ஆனால் மற்றொரு தேர்வு தான் தற்போது ரசிகர்களை மீண்டும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு அவருக்கு பதிலாக ஆறாவது பவுலிங் ஆப்ஷனாக ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இந்த தேர்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -

ஏனெனில் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக மோசமாக செயல்பட்டு வந்தாலும் அவரை நீக்காமல் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் சஞ்சு சாம்சனை குறிவைத்து நீக்கி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ரிஷப் பண்ட்டை துணை கேப்டனாக நியமித்ததே அவரை தொடர்ந்து விளையாட வைக்கத்தான் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மெகா சர்ச்சையை ஏற்படுத்திய 5 கிரிக்கெட் வீரர்களின் மோசமான சோசியல் மீடியா பதிவு – வித்யாசமான பதிவு

ஆனால் தற்போது உள்ள சூழலில் ரிஷப் பண்ட் மிகவும் மோசமாக விளையாடி ஆட்டமிழந்து வருவதால் அவர் வெளியேற்றப்பட்டு நிச்சயம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் தான் விளையாடிருக்க வேண்டும் என்றும் ஷ்ரேயாஸ் ஐயரை வேண்டுமென்றால் துணை கேப்டனாக மாற்றி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை காட்டமாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement